"அப்போது எனக்கு உதவ யாருமில்லை..’’ - மனம் திறந்த முன்னாள் இந்திய வீரர் பத்ரிநாத் !

"அப்போது எனக்கு உதவ யாருமில்லை..’’ - மனம் திறந்த முன்னாள் இந்திய வீரர் பத்ரிநாத் !
"அப்போது எனக்கு உதவ யாருமில்லை..’’  - மனம் திறந்த முன்னாள்  இந்திய வீரர் பத்ரிநாத் !

இந்திய அணியில் இருந்த வரை என் இடத்தை தக்கவைத்துக்கொள்ள நான் அனைத்துவிதமாகவும் முயற்சி செய்து பார்த்தேன் என்று தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பத்ரிநாத் தெரிவித்துள்ளார்.

இந்துஸ்தான் டைமைஸ் நாளிதழுக்கு பேசிய பத்ரிநாத் "என்னால் முடிந்த அளவுக்கு அனைத்தையும் முயற்சித்துப் பார்த்தேன். அப்போது இந்திய அணியின் பேட்டிங் வரிசை சச்சின், ராகுல், லக்ஷ்மன், சேவாக், காம்பீர், யுவராஜ் என நிரம்பி இருந்தது. நான் அப்போது என்னுடைய பந்துவீச்சில் சற்று கவனம் செலுத்தி இருக்கலாம். அப்போது அணியில் ஆல்ரவுண்டர் இடம் காலியாக இருந்தது. ஏனென்றால் நான் ஓரளவுக்கு ஆப் ஸ்பின் நன்றாகவே வீசுவேன். உள்ளூர் போட்டிகளிலும் விக்கெட்டுகள் எடுத்திருக்கேன்" என்றார்.

மேலும் பேசிய பத்ரிநாத் "அப்போது எனக்கு உதவவும் யாருமில்லை. அதனால் என்னுடைய பேட்டிங்கை நான் முழுக்க முழுக்க கவனம் செலுத்தினேன். ஆல் ரவுண்டராக இருந்திருந்தால் 6ஆவது அல்லது 7 ஆவது பேட்ஸ்மேனாக களமிறங்க வாய்ப்பு இருந்திருக்கும், அணியின் மூன்றாவது சுழற்பந்து வீச்சாளராகவும் இருந்திருப்பேன். என்னால் அணியில் இருந்த வரை என்னுடைய பங்களிப்பை முடிந்தளவுக்கு செய்தேன்" என கூறியுள்ளார்.

தமிழக அணிக்காக 10 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்த பத்ரிநாத். ஐபிஎல் போட்டிகளுக்காக சிஎஸ்கே அணியிலும் விளையாடி இருக்கிறார். சிஎஸ்கே அணிக்காக 95 போட்டிகளில் 1441 ரன்களை குவித்த பத்ரிநாத்தின் சராசரி 30.65. டி20 போட்டிகளுக்கு சரிப்பட்டு வரமாட்டார் என நிராகரிக்கப்பட்ட பத்ரிநாத், ஐபிஎல் டி20 தொடரில் சிஎஸ்கேவுக்காக விளாசியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com