\
‘‘ ‘இந்த வயதில் இது உனக்கு வேண்டாத வேலை’ என சொல்கிறார்கள்” மைக் டைசன் வேதனை

‘‘ ‘இந்த வயதில் இது உனக்கு வேண்டாத வேலை’ என சொல்கிறார்கள்” மைக் டைசன் வேதனை

‘‘ ‘இந்த வயதில் இது உனக்கு வேண்டாத வேலை’ என சொல்கிறார்கள்” மைக் டைசன் வேதனை
Published on

சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகு வரும் செப்டம்பர் மாதம் பாக்சிங் ரிங்குக்குள் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார் 54 வயதான ‘நாக் அவுட் மன்னன்’ மைக் டைசன்.

இதனை அவரே அதிகாரபூர்வமாக ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். ராய் ஜோன்ஸ் ஜூனியருடன் டைசன் பாக்சிங் செய்ய உள்ளார். அதற்காக தீவிர பயிற்சியையும் அவர் மேற்கொண்டு வருகிறார். பல வருடங்களுக்கு பிறகு பயிற்சி மேற்கொள்ளும் டைசன் அது குறித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

“நான் மீண்டும் பாக்சிங் விளையாட உள்ளதை குறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர். எனது பிள்ளைகளும் அது குறித்த விமர்சனத்தை என்னிடமே சொல்கின்றனர். ‘இந்த வயதில் இது எனக்கு வேண்டாத வேலை’ என சொல்கிறார்கள். 

அவர்களுக்கு நான் எப்படி பாக்சிங் செய்வேன் என தெரியாது. அவர்களில் ஒருவராலும் என்னை சண்டையிட்டு வீழ்த்த முடியாது என்பதை நான் அறிவேன். இருந்தாலும் இந்த வயதில் தீவிரமாக பாக்சிங் பயிற்சியில் ஈடுபடுவது உடல் முழுவதும் வலி கொடுக்கிறது. அதையெல்லாம் பொறுத்து கொண்டு தான் போட்டிக்கு என்னை தயார் செய்து வருகிறேன்” என தெரிவித்துள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com