சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஹிட்மேன் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் ரோகித் ஷர்மா. அண்மையில் முடிந்த ஐபிஎல் தொடரின் போது இடது காலின் தொடை பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பால் அவதிப்பட்டார்.
இதனால் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. அது பலத்த சர்ச்சையாக வெடித்தது. இருப்பினும் மும்பை அணிக்காக கடைசி இரு ஆட்டங்களில் ஆடிய ரோகித் சர்மா தனது உடல் திறனை நிரூபித்தார்.
இதையடுத்து ஆஸ்திரேலிய தொடருக்கான டெஸ்ட் அணியில் ரோகித் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனது உடற்தகுதியை நிரூபிப்பதற்கான பயிற்சியை தொடங்கி உள்ளார் ரோகித்.
“என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு விஷயத்தை மாட்டும் நான் சொல்லியாக வேண்டும். எனது காயம் குறித்து பிசிசிஐ-க்கும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் தெளிவாக சொல்லியிருந்தேன். இதில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை.
எனக்குள் நம்பிக்கை இருந்ததால் சில நாட்களில் காயம் சரியானதும் விளையாட தொடங்கினேன். இப்போது NCAவுக்கு வந்திருப்பது லாங்கர் பார்மெட்டில் விளையாடவும் நான் ஃபிட் என்பதை நிரூபிப்பதற்காக தான்” என சொல்லியுள்ளார் ரோகித்.