\
"தோனிக்கு பேட்டிங் செய்ய தெரியாது என நினைத்தேன்"- அன்ரிச் நார்ஜே

"தோனிக்கு பேட்டிங் செய்ய தெரியாது என நினைத்தேன்"- அன்ரிச் நார்ஜே

"தோனிக்கு பேட்டிங் செய்ய தெரியாது என நினைத்தேன்"- அன்ரிச் நார்ஜே
Published on

2010 சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டியின்போது தோனிக்கு பேட்டிங் செய்ய தெரியாது என நினைத்தேன் என்றார் தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் அன்ரிச் நார்ஜே தெரிவித்துள்ளார்.

இது குறித்து 'The Grade Cricketer podcast'க்கு பேசிய அன்ரிச் நார்ஜே "தென் ஆப்பிரிக்காவின் சாம்பியன்ஸ் டி20 லீக் நடைபெற்றபோது தோனிக்கு வலைப்பயிற்சியின்போது பந்துவீசினேன். அப்போது அவர் சில பந்துகளை கால்களை நகர்த்தாமல் விளையாடினார். அப்போது நான் தோனிக்கு பேட்டிங் செய்ய தெரியாது என நினைத்தேன். அப்போது எனக்கு வயது மிகக் குறைவு. ஆனால் அதன்பின்புதான் தெரிந்தது. தோனி மிகச் சிறந்த வீரர் என்று" என்றார் அவர்.

2010 ஆம் ஆண்டு முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது சிஎஸ்கே அணி. பின்பு, அதே ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் டி20 தொடரில் பங்கேற்று கோப்பையையும் கைப்பற்றியது சிஎஸ்கே அணி.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com