நான் இன்னும் ஷமியை காதலிக்கிறேன்: மனைவி ஹசின் ஜஹான்

நான் இன்னும் ஷமியை காதலிக்கிறேன்: மனைவி ஹசின் ஜஹான்
நான் இன்னும் ஷமியை காதலிக்கிறேன்: மனைவி ஹசின் ஜஹான்

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி மீது அவரது  ஹசின் ஜஹான் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.ஷமிக்கு பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் அவர்களுடன் தனிப்பட்ட முறையில் நேரம் செலவழித்ததாகவும் குற்றஞ்சாட்டினார்.

இதுதொடர்பாக முகநூல் ஆதாரங்களையும் வெளியிட்டார். ஷமி மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் தனக்கு உண்மையில்லாத ஷமி நாட்டுக்கும் உண்மையாக இல்லை. மேலும் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்ட பாகிஸ்தானை சேர்ந்த பெண்ணிடம் பணம் பெற்றார் எனத் தெரிவித்தார்.இதற்கு ஷமி தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன் செய்தியாளர்களை சந்தித்த ஷமி தான் மன உளைச்சலில் இருப்பதாகத் தெரிவித்தார். இந்நிலையில் கடந்த 24ஆம் தேதி ஷமியின் கார் விபத்துக்குள்ளானது.டேராடூனில் இருந்து டெல்லிக்கு தனது காரில் பயணம் செய்துக் கொண்டிருந்த போது  எதிர்பாராதவிதமாக இவரது கார் விபத்தில் சிக்கியது. இதில் ஷமி காயமடைந்தார். தலையில் அடிப்பட்ட ஷமிக்கு சிகிச்சை அளிக்கபட்டது. தற்போது அவர் தனது வீட்டில் ஓய்வில் உள்ளார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஷமியின் மனைவி ஹசின் ஜஹான்,  “எனது போராட்டங்கள் எல்லாம் அவர் எனக்கு என்ன செய்தாரோ அதற்கு எதிரானதுதான். ஆனால் அவரை உடல் ரீதியாக நான் காயப்படுத்த விரும்பவில்லை. அவர் இனி என்னை ஒரு மனைவியாக விரும்பமாட்டார். அவர் என் கணவர் என்பதால் அவரை நான் காதலிக்கிறேன். நான் என் கணவருடன் தொடர்பு கொள்ள முயற்சி செய்கிறேன். ஆனால் அவர் எனது தொலைபேசி அழைப்பிற்கு பதிலளிக்கவில்லை. அவர் தற்போது எங்கு இருக்கிறார் என்பதை அவரது குடும்ப உறுப்பினர்கள் எனக்கு சொல்லவில்லை. நான் உதவியற்றவளாக இருக்கிறேன்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com