\
“என்னை மன்னித்துவிடுங்கள் ரசிகர்களே.. சதம் நழுவிவிட்டது” கிறிஸ் கெயில் உருக்கம்

“என்னை மன்னித்துவிடுங்கள் ரசிகர்களே.. சதம் நழுவிவிட்டது” கிறிஸ் கெயில் உருக்கம்

“என்னை மன்னித்துவிடுங்கள் ரசிகர்களே.. சதம் நழுவிவிட்டது” கிறிஸ் கெயில் உருக்கம்
Published on

அபுதாபியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. 

முதலில் பேட் செய்த பஞ்சாப் 4 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்களை எடுத்தது.

பஞ்சாப் அணியின் பேட்ஸ்மேன் கிறிஸ் கெயில் இந்த ஆட்டத்தில் 99 ரன்களை குவித்தார். 

அபாரமான ஆட்டத்திற்கு பிறகு “180 ரன்கள் நல்ல ஸ்கோர் என்று நினைக்கிறேன். இந்த விக்கெட் விளையாட நன்றாக உள்ளது. இரவில் விளையாட சூப்பராக இருக்கும். 99 ரன்களில் அவுட் ஆனது துரதிர்ஷ்டவசமானது. ஆனால் இறுதி வரை கிரீஸில் நின்று விளையாடியது மகிழ்ச்சி தான். 

1000 சிக்ஸர்களை அடித்தது ஒரு ரெக்கார்டாக உள்ளது. 41 வயதிலும் பவர் ஹிட் செய்வதை நல்ல விஷயமாக பார்க்கிறேன். அதற்கு நன்றி சொல்ல வேண்டும். நான் சதம் அடிக்க வேண்டுமே என விரும்பியவர்களை ஏமாற்றியதற்கு என்னை மன்னிக்கவும். நான் இன்று அதை மிஸ் செய்து விட்டேன். இருந்தாலும் என் மனதில் அதனை சதமாகவே பார்க்கிறேன்” என கெயில் சிரித்துக் கொண்டே சொல்லியிருந்தார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com