கேட்ச்-களை கோட்டை விட்டதால் செஞ்சுரி அடித்தேன்: மன்ரோ மகிழ்ச்சி

கேட்ச்-களை கோட்டை விட்டதால் செஞ்சுரி அடித்தேன்: மன்ரோ மகிழ்ச்சி
கேட்ச்-களை கோட்டை விட்டதால் செஞ்சுரி அடித்தேன்: மன்ரோ மகிழ்ச்சி

இந்திய அணியினர் சில கேட்சுகளை கோட்டை விட்டதால், செஞ்சுரி அடிக்க முடிந்தது என்று நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் காலின் மன்ரோ சொன்னார். 

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரை இந்திய அணியிடம் இழந்த அந்த அணி, அடுத்து 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் பங்கேற்றுள்ளது. முதலாவது ஆட்டத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, நேற்று நடந்த 2 வது போட்டியில் தோல்வி அடைந்தது.  நியூசிலாந்து அணியின் காலின் மன்றோ அபாரமாக ஆடி, 54 பந்துகளில் சதமடித்தார். 

சதமடித்தது பற்றி மன்ரோ கூறும்போது, ‘மகிழ்ச்சியாக இருக்கிறது. சில கேட்ச்-களை இந்திய அணியினர் விட்டுவிட்டனர். டி20 போட்டியில் இப்படித்தான் நடக்கும். இதை எனக்கு சாதகமாக்கிக் கொண்டேன். 200 ரன்னாக இருந்தாலும் 120 ரன்னாக இருந்தாலும் சேஸிங்கில் எப்போதும் ஒரே மாதிரிதான் விளையாடுகிறேன். நீண்ட நேரம் நின்று சிக்சரும் பவுண்டரியுமாக அடிக்க முயற்சிக்கிறேன். இந்தப் போட்டியிலும் அப்படித்தான் ஆடினேன்’ என்றார்.

நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கூறும்போது, ‘கடந்த போட்டியை விட இந்தப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டோம். மன்ரோ அடித்த சதம் அதிக ஸ்கோரை எட்ட உதவியது. கப்தில், புரூஸும் நன்றாக ஆடினர். பந்துவீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட்டனர். அனைத்துவிதத்திலும் நாங்கள் முன்னேற்றம் கண்டுள்ளோம். இதே போல அடுத்தப் போட்டியிலும் செயல்படுவோம்’ என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com