”இந்த மீமோடுதான் என் பொழுதே விடிந்தது.. யாரு பார்த்த வேலைப்பா இது?” - கலகலத்த அஸ்வின்

”இந்த மீமோடுதான் என் பொழுதே விடிந்தது.. யாரு பார்த்த வேலைப்பா இது?” - கலகலத்த அஸ்வின்
”இந்த மீமோடுதான் என் பொழுதே விடிந்தது.. யாரு பார்த்த வேலைப்பா இது?” - கலகலத்த அஸ்வின்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடருக்கு முன்னதாக, தற்போது அஸ்வின் ஒரு வேடிக்கையான மீம் உடன் தனது காலை தொடங்கியதாக, தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிரோபி வரும் பிப்ரவரி 9ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய தொல்லையாக அஸ்வின் இருப்பார் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் ஆஸ்திரேலிய அணியில் அதிக இடது கை பேட்டர்கள் இருக்கின்றனர். இதானாலேயே அஸ்வினை எதிர்கொள்ளும் வலைபயிற்சியை 5 நாட்களுக்கு முன்னதாகவே தொடங்கிவிட்டனர் ஆஸ்திரேலியாவின் பேட்டர்கள். மேலும் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள தனியாக ஆயத்தமாகி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அஸ்வினை சமாளிக்க டூப்ளிகேட் அஸ்வின் உதவியை நாடிய ஆஸ்திரேலியா!

21 வயது நிரம்பிய மகேஷ் பிதியா என்ற இளம் ஆஃப் ஸ்பின்னரான இவர், ரஞ்சிக்கோப்பையில் பரோடா அணிக்காக அறிமுகமான வீரர். அப்படியே ரவிச்சந்திரன் அஸ்வின் மாதிரியான பவுலிங் ஆக்சனை கொண்டுள்ளார். இவரது பந்துவீச்சை இன்ஸ்டாக்ராமில் கண்ட ஆஸ்திரேலிய அணி, வலைபயிற்சியில் பந்துவீசுமாறு மகேஷ் பிதியா உதவியை நாடியது.

பெங்களூரில் உள்ள பயிற்சி முகாமிற்கு சென்றுள்ள மகேஷ், அங்கு ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பேட்டர்களான ஸ்டீவ் ஸ்மித், லபுசனே மற்றும் டிராவிஸ் ஹெட் போன்ற வீரர்களுக்கு பந்துவீச, அவர்கள் அஸ்வினை எதிர்கொள்ளும் வியூகத்தில் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்திய ஸ்பின்னர்களின் “ஸ்லைடு ஸ்பின்” எதிர்கொள்வது சவாலானாது-ஆஸ்திரேலியா பயிற்சியாளர்

இந்திய அணியின் சுழற்பந்துவீச்சு குறித்து பேசியிருந்த ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர், “இந்திய சுழற்பந்துவீச்சாளர்களான அஸ்வின், அக்சர் பட்டேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய மூன்று பேரையும் புதிய பந்தில் எதிர்கொள்வது என்பது கடினமான ஒன்று. அவர்கள் வீசும் “ஸ்லைடு ஸ்பின்”ஆனது ஆடுகளத்தின் மேற்பரப்பில் இருந்து விரைவாக வேரியேசனோடு வரும் பந்துவீச்சாகும். அதை பெரும்பாலும் புதிய பந்துகளில் எதிர்கொண்டு விளையாடுவது என்பது, பேட்ஸ்மேன்களுக்கு கடினமான ஒன்றாக இருக்கும். எனவே அதற்கான பயிற்சிகளில் நாங்கள் கவனம் செலுத்தி உள்ளோம்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் அஸிவினின் சுயவிவரம் குறித்த மீம் ஒன்றை கிரியேட் செய்திருக்கும் ரசிகர் ஒருவரால் அஸ்வின் இன்ப அதிர்ச்சியாகி உள்ளார். அந்த சுயவிவர ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்துள்ள அஸ்வின், இதை யார் செய்திருப்பார்கள் என நான் ஆச்சரியப்படுகிறேன் என புன்னகையுடன் தெரிவித்துள்ளார்.

பவுலிங் வகை: வலது கைது ஆஃப் ஸ்பின்னர்/வலது கை லெக் ஸ்பின்னர்

பொதுவாக ஐசிசி வலைதளம், க்ரிக்பஸ், க்ரிக் இன்ஃபோ முதலிய கிரிக்கெட் வலைதளங்களில் அஸ்வினுடைய சுயவிவரத்தில் பவுலிங் வகை என்பது, வலது கை ஆஃப்பிரேக் அல்லது வலதுகை ஆஃப் ஸ்பின்னர் என மட்டும் தான் இருக்கும்.

ஆனால் அஸ்வின் ஷேர் செய்திருந்த அந்த ஸ்கிரீன்ஷாட்டில் அஸ்வின் பவுலிங் வகையில் வலது கைது ஆஃப் ஸ்பின்னர்/வலது கை லெக் ஸ்பின்னர் என இரண்டு வகையுமே இடம்பெற்றிருந்தது.மேலும் அதில் எது அவருடைய பவுலிங் வகை என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்பது போல் கேள்விக்குறி இடம்பெற்றிருந்தது.

அதை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்த அஸ்வின், ” என் காலை காபி இதனுடன் வந்தது, இதை யார் செய்தார்கள் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது” என புன்னகை ஸ்மைலிகளோடு பதிவிட்டிருந்தார். அந்த பதிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் சார்பாக, “ பார்டர் கவாஸ்கர் டிரோபியின் முதல் நாளிற்கு வரவேற்கிறோம்” என கருத்திடப்பட்டது.

முன்னதாக அஸ்வினை சமாளிக்க ஆஸ்திரேலிய அணி மேற்கொண்டு வரும் டூப்ளிகேட் அஸ்வின் குறித்த வியூகங்களால் கலாய்த்து பேசியிருந்த முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாஃபர், “பார்டர் கவாஸ்கர் டிரோபி தொடங்க இன்னும் 5 நாட்கள் இருக்கும் நிலையில், அதற்குள் அஸ்வின் ஆஸ்திரேலியா அணியின் மண்டைக்குள் நுழைந்து விட்டார்” என கிண்டல் அடித்திருந்தார்.

இன்னொரு ரசிகர் பதிவிட்டிருந்ததில், “ஆஸ்திரேலிய அணி அஸ்வினுக்கு எதிராக நிறைய பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அவர் களத்தில் வந்து லெக் ஸ்பின் வீச போகிறார், அப்போது ஆஸ்திரேலியா தடுமாற போகிறது. அவரது பந்துவீச்சை உங்களால் புரிந்துகொள்ள முடியாது” என்று பதிவிட்டிருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com