“ தலையில் உள்ள முடிகளை விட என்னிடம் பணம் அதிகம்”- ஷேவாக்கை மறைமுகமாக சாடிய அக்தர்

“ தலையில் உள்ள முடிகளை விட என்னிடம் பணம் அதிகம்”- ஷேவாக்கை மறைமுகமாக சாடிய அக்தர்

“ தலையில் உள்ள முடிகளை விட என்னிடம் பணம் அதிகம்”- ஷேவாக்கை மறைமுகமாக சாடிய அக்தர்
Published on

கிரிக்கெட் வீரர் ஷேவாக் சில ஆண்டுகளுக்கு முன்பு சொன்ன கருத்துக்கு, யூ டியூப் பக்கம் மூலம் பாக்., பந்துவீச்சாளர் அக்தர் தற்போது பதிலளித்துள்ளார்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அதிவேக பந்துவீச்சாளரான சோயப் அக்தர், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். அதன்பின்பு யூ டியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். அவ்வப்போது கிரிக்கெட் தொடர்பான வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். குறிப்பாக இந்திய அணி வீரர்களை பற்றியும், இந்திய கிரிக்கெட் அணி பற்றியும் புகழ்ந்து வீடியோ வெளியிடுவார். இதனால் இந்திய ரசிகர்களிடையே அக்தரின் யூ டியூப் சேனலுக்கு வரவேற்பு அதிகம்.

இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு பேசிய இந்திய கிரிக்கெட் வீரர் ஷேவாக், சிலர் பணம் ஈட்ட வேண்டுமென்பதற்காகவே இந்திய அணியை புகழ்ந்து பேசுகிறார்கள் என தெரிவித்தார். ஷேவாக்கின் அந்த கருத்துக்கு அக்தர் தற்போது பதில் அளித்துள்ளார். ஷேவாக்கை இந்திய நட்சத்திரம் என்று மறைமுகமாக குறிப்பிட்டுள்ள அக்தர், “ இந்திய நட்சத்திரத்தின் தலையில் உள்ள முடிகளை விடவும் அதிகமாக எண்ணிடம் பணம் உள்ளது. கிரிக்கெட் தொடர்பான என் கருத்தை நான் சொல்வதில் இவர்களுக்கெல்லாம் என்ன பிரச்னை என்று எனக்கு புரியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “ நான் பாகிஸ்தானுக்காக 15 வருடங்கள் விளையாடியுள்ளேன். நான் ஒரு வேகப்பந்துவீச்சாளர். இந்த யூ டியூப் மூலம் நான் பிரபலமடையவில்லை. ஆமாம், எனக்கு இந்தியாவில் ரசிகர்கள் அதிகம்தான். அதற்காக நான் புகழவில்லை. இந்தியா சரியாக விளையாடாதபோது அதையும் நான் விமர்சனம் செய்துள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

ஆனால் அக்தரின் இந்த கருத்துக்கு இந்திய வீரர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஷேவாக் கருத்து கூறி 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ளதாகவும், அப்போது அக்தர் யூடியூப் சேனலை தொடங்கவே இல்லை என்றும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். இன்றும் தன் யூ டியூப் சேனலில் பணம் ஈட்டவே அக்தர் இப்படி பேசியுள்ளதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com