"என் வாழ்க்கை கதையில் அமீர்கான் நடித்தால் சிறப்பாக இருக்கும்" - விஸ்வநாதன் ஆனந்த்

"என் வாழ்க்கை கதையில் அமீர்கான் நடித்தால் சிறப்பாக இருக்கும்" - விஸ்வநாதன் ஆனந்த்
"என் வாழ்க்கை கதையில் அமீர்கான் நடித்தால் சிறப்பாக இருக்கும்" - விஸ்வநாதன் ஆனந்த்

உலக செஸ் சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் தன்னுடைய வாழ்க்கை படத்தில் அமீர் கான் நடித்தால் சிறப்பாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேட்டியளித்துள்ள விஸ்வநாதன் ஆனந்த் "நான் என்னுடைய வாழ்க்கை குறித்து திரைப்படமாக எடுக்க அனுமதி அளித்துள்ளேன். என் வாழ்க்கை கதையை முழுவதுமாக தயாரிப்பாளரிடம் கூறிவிட்டேன். திரைக்கதை எழுதும் பணி விரைவில் தொடங்கி நடைபெற உள்ளது. கொரோனா காரணமாக வேலை தடைபட்டுள்ளது. படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று இப்போது கூற இயலாது. இத்திரைப்படம் குறித்து வேறு தகவல்கள் எதையும் கூற முடியாது. இன்னும் சில தினங்களில் அனைத்து விஷயங்களையும் தெரிவிக்கிறோம்" என்றார்.

மேலும் பேசிய அவர் "அமீர் கான் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று ஆசைப்படுகிறேன். அவருக்கும் எனக்கும் நிறைய விஷயங்கள் பொதுவாக உள்ளன. ஆனால், யார் நடிப்பார்கள் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியாது. இப்போதைக்கு ஓய்வு பெறும் முடிவு இல்லை. கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஆன்லைன் மூலமாக பல்வேறு செஸ் தொடர்களில் பங்கேற்றிருந்தேன். இன்னும் நிறைய போட்டிகள் வர உள்ளன" என்றார் விஸ்வநாதன் ஆனந்த்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com