"இந்தியா ஜெயிச்சப்ப கண்ணீர்விட்டு அழுதேன்!" - விவிஎஸ் லஷ்மண் உருக்கம்

"இந்தியா ஜெயிச்சப்ப கண்ணீர்விட்டு அழுதேன்!" - விவிஎஸ் லஷ்மண் உருக்கம்
"இந்தியா ஜெயிச்சப்ப கண்ணீர்விட்டு அழுதேன்!" - விவிஎஸ் லஷ்மண் உருக்கம்

ஆஸ்திரேலியாவை இந்திய அணி வென்றபோது கண்ணீர்விட்டு அழுதேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லஷ்மண் தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்று சாதனைப்படைத்தது. இந்தியாவின் இந்த வெற்றியை பிரதமர் உள்ளிட்ட பலரும் தங்களது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர். இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லஷ்மண் இது குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.

இது குறித்து ஸ்போர்ஸ் டுடேவுக்கு பேசிய அவர் "ஆஸ்திரேலிய டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டத்தை என் குடும்பத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தேன். ரிஷப் பன்ட் மற்றும் வாஷிங்டன் சுந்தர் விளையாடும்போது மிகவும் பதற்றமாக உணர்ந்தேன். அந்தத் தருணம் மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தது. ஏனென்றால் இருவரும் மிகவும் சிறப்பாக விளையாடினார்கள்" என்றார்.

மேலும் "அப்போது என் மனதில் இருந்ததெல்லாம் ஆஸ்திரேலியாவை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்பதாகதான் இருந்தது. காபா போட்டிக்கு முன்பு பலரும் கணித்தது வேறு ஆனால் நடந்தது வேறாக இருந்தது. நான் இதுவரை இருமுறை ஆனந்தத்தில் அழுது இருக்கிறேன். அது 2011 இல் இந்தியா உலகக் கோப்பையை வென்றபோதும். அதற்கடுத்து இம்முறை ஆஸ்திரேலியாவை வென்றபோதும் கண்ணீர்விட்டேன்" என்றார் லஷ்மண்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. முதல் போட்டியில் படுதோல்வி அடைந்த நிலையில் மீண்டெழுந்த இந்திய அணி இரண்டாவது போட்டியில் வென்றும், மூன்றாவது போட்டியை டிராவும் செய்தது. இதனால், நான்காவது போட்டி மிகவும் பரபரப்பாக நடைபெற்றது. இறுதிப் போட்டியின் கடைசி நாள் ஒரு டி20 போட்டியை போலவே அவ்வளவு ஸ்வாரஸ்யமான, த்ரில்லராக சென்றது. அதனால்தான் இந்திய அணி இறுதி வெற்றியை எட்டிய போது அது பலரையும் உணர்ச்சிவசப்பட வைத்துவிட்டது. அப்படியான ஒரு உணர்வைத்தான் லஷ்மண் வெளிபடுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com