கங்குலியும் அவருக்கு பிடித்த ராசியான ‘கோட்’டும்..!
இது நான் கேப்டனாக இருக்கும்போது கொடுக்கப்பட்ட கோட் என்று செய்தியாளர் கேள்விக்கு கங்குலி பதில் அளித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐயின் தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இன்று பொறுப்பேற்று உள்ளார். இவர் பிசிசிஐயின் 39-ஆவது தலைவராவர். அத்துடன் பிசிசிஐ தலைமை பொறுப்பை ஏற்கும் இரண்டாவது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.
இந்நிலையில் பிசிசிஐ தலைவராக பொறுப்பு ஏற்றப் பிறகு கங்குலி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கங்குலி பிசிசிஐயின் சின்னம் பொறிக்கப்பட்ட கோட்டை அணிந்து இருந்தார். அப்போது செய்தியாளர் ஒருவர் அந்தக் கோட் குறித்து கேள்வி கேட்டார். அதற்கு கங்குலி,“இது நான் இந்திய கேப்டனாக பதவியேற்றபோது கொடுக்கப்பட்ட கோட். இன்று பிசிசிஐ தலைவராக பதவி ஏற்க வரும்போது அதே கோட்டை அணிந்து வந்துள்ளேன். அந்தக் கோட் தற்போது எனக்கு லூசாக உள்ளது” எனத் தெரிவித்தார். சவுரவ் கங்குலி 2000-ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.