தோல்வி அடைந்துகொண்டே இருக்கிறேன்: யுவராஜ் சிங்

தோல்வி அடைந்துகொண்டே இருக்கிறேன்: யுவராஜ் சிங்

தோல்வி அடைந்துகொண்டே இருக்கிறேன்: யுவராஜ் சிங்
Published on

’கடந்த 17 வருடமாக தோல்வி அடைந்துகொண்டே இருக்கிறேன்’ என்று இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் கூறினார்.

இலங்கையில் யுனிசெஃப் நடத்திய விழா ஒன்றில் கலந்துகொண்ட அவர் மேலும் கூறும்போது, ‘கடந்த 17 வருடமாக தோல்வி அடைந்துகொண்டே இருக்கிறேன். கடந்த மூன்று முறை பிட்னஸ் டெஸ்டில் தோல்வி அடைந்தேன். ஆனால், இப்போது அதில் பாஸாகி இருக்கிறேன். தோல்விகளை கண்டு நான் பயப்படவில்லை. வாழ்க்கையில் மேடு பள்ளங்களை சந்தித்தவன்தான் நான். வெற்றி பெற வேண்டும் என்றால் முதலில் தோல்வி அடைய வேண்டும். நீங்கள் வெற்றிபெற்ற மனிதராக இருக்க வேண்டும் என்றால் முதலில் தோற்கடிக்கப்பட வேண்டும். அதுதான் உங்களை அடுத்தக் கடத்துக்கு அழைத்துச் செல்லும். 

நான் இப்போதும் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருக்கிறேன். அடுத்து எந்த விதமான போட்டியில் விளையாடப் போகிறேன் என்று தெரியவில்லை. வயதாகிக்கொண்டு இருப்பதால் என்னை கடுமையான பயிற்சிக்கு உட்படுத்திக்கொண்டே இருக்கிறேன். 2019 உலகக் கோப்பை கிரிக்கெட் வரை விளையாடுவேன்’ என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com