'ஆஸ்திரேலியாவை இந்தியாவால் ஜெயிக்க முடியாது' ரிக்கி பாண்டிங்

'ஆஸ்திரேலியாவை இந்தியாவால் ஜெயிக்க முடியாது' ரிக்கி பாண்டிங்
'ஆஸ்திரேலியாவை இந்தியாவால் ஜெயிக்க முடியாது' ரிக்கி பாண்டிங்

இந்திய டெஸ்ட் அணியின் பேட்டிங் ஆஸ்திரேலியாவைவிட ரொம்ப பலவீனமானது என ஆஸியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், மழை காரணமாக 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதைத் தொடர்ந்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் பங்கேற்கின்றன. அடிலெய்டில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 31 ரன் வித்தியாசத்தில் சாதனை வெற்றி பெற்றது. 

இதனையடுத்து பெர்த்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 146 ரன்களில் வெற்றிப் பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் பேட்டிங் மோசமாக இருந்ததால் ஆஸி மிக எளிதாக வெற்றிப்பெற்றது. இந்திய அணியின் தேர்வு குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில். ஆஸியின் முன்னாள் கேப்டனும் அதிரடி பேட்ஸ்மேனுமான ரிக்கி பாண்டிங் இந்தியாவின் பேட்டிங் வரிசை குறித்த விமர்சனம் செய்துள்ளார். 

"தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளையும் நான் கவனித்தே வருகிறேன். இந்திய அணியால் நிச்சயம் இந்த டெஸ்ட் தொடரை வெல்ல முடியாது. இந்தியாவின் பேட்டிங் வரிசை மோசமாகவே உள்ளது. அது பெர்த் டெஸ்ட் போட்டியில் வெட்ட வெளிச்சமாகி விட்டது. தொடக்க ஆட்டக்காரர்கள் காயம் அதனால் புதிய வீரரை அடுத்த டெஸ்ட்டில் களமிறக்குவார்கள். இதுபோன்ற சூழல் இந்திய அணி வீரர்களின் மன நிலையை பாதிக்கும்" என்று ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் தொடர்ந்த அவர் "ஆஸ்திரேலிய அணி அடுத்து மெல்போர்னில் நடக்கும் போட்டிக்கு பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டாம். மிகவும் ரிலாக்ஸாக ஆடினாலே போதும் இந்தியாவை எளிதில் வென்றுவிடலாம். மெல்போர்ன் மற்றும் சிட்னி ஆடுகளங்கள் இந்தியர்களுக்கு ஏற்றவையாக இருந்தாலும், ஆஸி அணியே வெல்லும் என தெரிவித்துள்ளார் ரிக்கி பாண்டிங்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com