600 உடன் ஏன் நிறுத்த வேண்டும் .. 700 விக்கெட்டுகளை டார்கெட் செய்யும் ஜேம்ஸ் ஆண்டர்சன் 

600 உடன் ஏன் நிறுத்த வேண்டும் .. 700 விக்கெட்டுகளை டார்கெட் செய்யும் ஜேம்ஸ் ஆண்டர்சன் 
600 உடன் ஏன் நிறுத்த வேண்டும் .. 700 விக்கெட்டுகளை டார்கெட் செய்யும் ஜேம்ஸ் ஆண்டர்சன் 

‘என்னால் 700 விக்கெட்டுகளை வீழ்த்த முடியும்’ என தெரிவித்துள்ளார் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 600 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற வரலாற்றுச் சாதனையை நேற்று படைத்த இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சன்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்களின் பட்டியலில் உள்ள இலங்கையின் முரளிதரன் (800) மற்றும் ஆஸ்திரேலியாவின் வார்னேவுக்கு (708) அடுத்ததாக 700 விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்களின் பட்டியிலில் நான் இருக்க விரும்புகிறேன் என ஈ.எஸ்.பி.என் நிறுவனத்துடனான பேட்டியில் தெரிவித்துள்ளார் ஜேம்ஸ் ஆண்டர்சன்.

“அண்மையில் இது குறித்து கேப்டன் ஜோ ரூட்டுடன் நான் பேசியிருந்தேன். அப்போது அடுத்த ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ள ஆஷஸ் தொடரில் நானும் அணியில் விளையாட வேண்டும் என அவர் விரும்புவதாக சொன்னார். ஒவ்வொரு நாளும் அசராமல் பயிற்சி மேற்கொண்டு வரும் நான் அதற்கு தகுதியானவன் என கருதுகிறேன். 

இந்த கிரிக்கெட் சீசனில் நான் சரிவர பந்து வீசவில்லை என்றாலும் தற்போது நடந்து முடிந்த கடைசி டெஸ்ட் போட்டியில் நான் எனது ஃபார்மை மீட்டெடுத்துள்ளதாகவே நம்புகிறேன். இங்கிலாந்து அணிக்காக ஆட எனது உடலில் வலு இருக்கிறது என நினைக்கிறேன். அந்த எண்ணம் இருக்குற வரையில் விளையாடுவேன். 

இங்கிலாந்து கிரிக்கெட் வீரனாக எனது கடைசி டெஸ்ட் போட்டிகளில் நான் இன்னும் வெற்றி பெறவில்லை என்று கருதுகிறேன். அது கைகூடும் வரை விளையாடுவேன். என்னால் ஏன் 700 விக்கெட்டுகளை டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்த்த முடியாது? முடியும் என நான் நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார் ஆண்டர்சன்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com