என்னை மன்னிச்சிருங்க ரசிகர்களே... பங்களா பந்துவீச்சாளர் உருக்கம்!

என்னை மன்னிச்சிருங்க ரசிகர்களே... பங்களா பந்துவீச்சாளர் உருக்கம்!

என்னை மன்னிச்சிருங்க ரசிகர்களே... பங்களா பந்துவீச்சாளர் உருக்கம்!
Published on

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள், தினேஷ் கார்த்திக்கை புகழ்ந்துகொண்டிருக்க, இன்னொரு பக்கம் தன்னை மன்னித்துவிடும்படி கோரிக்கை வைத்திருக்கிறார் பங்களாதேஷ் பந்துவீச்சாளர்!

முத்தரப்பு டி20 தொடரின் ஃபைனலில் இந்தியா-பங்களாதேஷ் அணிகள் நேற்று முன்தினம் மோதின. இதில் தோல்வியின் விளிம்பில் இருந்தது இந்திய அணி. தமிழக வீரர் விஜய் சந்தர் பதற்றத்தில் பந்துகளை வீணடித்துக்கொண்டிருந்தார். இருந்தாலும் அடுத்துக் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் அதிரடி காட்டத் தொடங்கினார். 

அப்போது 19-வது ஓவரை வீசினார், ரூபெல் ஹூசைன். அதற்கு முன்பு வரை ரன்னே விட்டுக்கொடுக்காமல் கச்சிதமாக பந்து வீசிய ரூபெல், இந்த ஓவரில் அதை தொடர முடியவில்லை. ஏனென்றால் தினேஷ் கார்த்திக்!

இந்த ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரி உட்பட 22 ரன்கள் எடுக்கப்பட்டது. ஆட்டத்தின் போக்கை மாற்றிய ஓவர் இதுதான். இதையடுத்து கடைசி ஓவரில் கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தார் தினேஷ் கார்த்திக். ரூபெல் வீசிய 19-வது ஓவர்தான் போட்டி மாறக் காரணமாக அமைந்ததால், அவர், பங்களாதேஷ் ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டிருக்கிறார்.

இதுபற்றி அவர், ‘இந்த தோல்வியை கொடுமையானதாக உணர்கிறேன். அணியின் தோல்விக்கு காரணமாக இருப்பேன் என நினைத்ததே இல்லை. இறுதிப்போட்டியில் வெற்றியை நெருங்கி வந்து தோல்வியை சந்தித்தோம். இதற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். என்னை மன்னித்துவிடுங்கள்’ என்று கூறியுள்ளார். இது தொடர்பாக முகப்புத்தகத்திலும் அவர் பதிவிட்டுள்ளார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com