\
‘நான் எதற்கும் உதவாதவன்’ டேல் ஸ்டெய்ன் - ‘நீங்கள் என்றுமே ராஜா தான்’ ரசிகர்கள் 

‘நான் எதற்கும் உதவாதவன்’ டேல் ஸ்டெய்ன் - ‘நீங்கள் என்றுமே ராஜா தான்’ ரசிகர்கள் 

‘நான் எதற்கும் உதவாதவன்’ டேல் ஸ்டெய்ன் - ‘நீங்கள் என்றுமே ராஜா தான்’ ரசிகர்கள் 
Published on

தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் நடப்பு ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருகிறார். 

ஒரு காலத்தில் தனது வேகத்தால் எதிரணி பேட்ஸ்மேன்களை மிரட்டி வந்த ஸ்டெய்ன் இப்போது செமையாக பேட்ஸ்மேன்கள் பேட்டால் குட்டுப்பட்டு வருகிறார். 

நடப்பு ஐபிஎல் சீசனில் மூன்று ஆட்டங்களில் விளையாடியுள்ள ஸ்டெய்ன் 70 பந்துகள் வீசியுள்ளார். அதில் ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தியுள்ள அவர் 133 ரன்களை கொடுத்துள்ளார். அவரது பவுலிங் எக்கனாமி 11.40. 

இந்நிலையில் நான் எதற்குமே உதவாதவன் என ஸ்டெய்ன் சொல்ல ‘அப்படியெல்லாம் இல்லை, நீங்கள் என்றுமே ராஜா தான்’ என ரசிகர்கள் மீம்ஸ் போட்டு அவருக்கு ஆறுதல் சொல்லியுள்ளனர். 

2015இல் ஸ்டெய்ன் வேகத்தில் ஸ்டெம்ப் இரண்டாக உடையும் காட்சியையும் ரசிகர்கள் ஹைலைட் செய்து வருகின்றனர். அது செஞ்சுரியனில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற தொடர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com