கால்பந்தின் கடவுள் என வர்ணிக்கும் அளவுக்கு தாம் சிறந்த வீரர் அல்ல என உலக புகழ் பெற்ற வீரர் மாரடோனா தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கால்பந்து ஜாம்பவான் மாரடோனாவின் 12 அடி உயர சிலையை திறந்து வைத்த மாரடோனா, தாம் ஒரு சாதாரண கால்பந்து வீரர். கால்பந்தின் கடவுள் என வர்ணிக்கும் அளவுக்கு தாம் சிறந்த வீரர் அல்ல என கூறினார். துர்கா பூஜையையொட்டி கொல்கத்தாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மாரடோனா, பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள 11 பேருக்கு தலா 10 ஆயிரம் நிதியுதவி வழங்கிய அவர், குளர்சாதனம் பொருத்தப்பட்ட ஆம்புலன்ஸ் சேவையையும் தொடக்கி வைத்தார்.