“ஆல் இஸ் வெல்” - மீண்டு வந்த கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியன் எரிக்சன்

“ஆல் இஸ் வெல்” - மீண்டு வந்த கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியன் எரிக்சன்
“ஆல் இஸ் வெல்” - மீண்டு வந்த கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியன் எரிக்சன்

கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்ற யூரோ கோப்பையின் லீக் ஆட்டத்தில் டென்மார்க் அணியின் கிறிஸ்டியன் எரிக்சன் விளையாடிக் கொண்டிருந்த போதே மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு முதல் உதவி சிகிச்சை கொடுத்த மருத்துவர்கள், தொடர்ந்து மறுத்துவமனையிலும் அவரை மேல் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது அவர் நலமாக இருப்பதாக அவரே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். 

என்ன நடந்தது?

பின்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் டென்மார்க் அணி சார்பில் மிட் ஃபீல்டராக களம் இறங்கினார் 29 வயதான எரிக்சன். அந்த ஆட்டத்தின் 42வது நிமிடத்தில் பந்தை பாஸ் செய்ய முயன்ற போது எரிக்சன் அப்படியே களத்தில் விழுந்தார். அசைவற்று கிடந்த அவருக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

“எல்லோருக்கும் வணக்கம். உலகம் முழுவதும் இருந்து தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் உங்களது அன்பான நலன் விசாரிப்புக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி. நான் நலமாக உள்ளேன். மருத்துவமனையில் மேலும் சில பரிசோதனைகள் செய்ய வேண்டி உள்ளது. இருந்தாலும் இப்போதைக்கு நான் நலமாக உள்ளேன்” என அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com