என் வீட்டிற்கு திரும்புகிறேன்: தோனியின் நெகிழ்ச்சி

என் வீட்டிற்கு திரும்புகிறேன்: தோனியின் நெகிழ்ச்சி

என் வீட்டிற்கு திரும்புகிறேன்: தோனியின் நெகிழ்ச்சி
Published on

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மீண்டும் இணைந்ததற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட தோனியின் வீடியோ சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் அடித்து வருகிறது. 

2 ஆண்டுகள் தடைக்கு பின் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு தோனி மீண்டும் திரும்பியுள்ள செய்திகள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் பலர், தோனி வருகையை சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். இதில், ஐபிஎல் சீசனுக்கான வீரர்களை தக்க வைக்கும் நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மகேந்திர சிங் தோனி, சுரேஷ் ரெய்னா, ஜடேஜா ஆகியோர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தக்க வைக்கப்படும் வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 

இதனைத்தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மீண்டும் இணைந்தற்கான ஒப்பந்தத்தில் தோனி கையெழுத்திட்டார். அவர் கையெழுத்திட்ட வீடியோ பதிவில் அவரின் செல்ல மகள் ஜிவா தந்தையின் அருகில் நின்றுக்கொண்டிருக்கிறார். தோனி ஒவ்வொரு பேப்பராக கையெழுத்திடுகிறார். அப்போது அவரின் மனைவி சாக்‌ஷியிடம், “மீண்டும் உன் வீட்டிற்கு செல்கிறாயா? மகி’’ என்று கேள்வி எழுப்புகிறார். அதற்கு தோனி “ஆமாம். மீண்டும் நம் வீட்டிற்கு செல்கிறோம்” என்கிறார். அதனைத்தொடர்ந்து சாக்‌ஷி, “போன வருடம் நான் ஐபில் தொடரை பார்க்கவில்லை” என்கிறார். அதற்கு தோனி சிரித்தபடியே “இனிமேல் பார்க்கலாம் “ என்று பதிலளிக்கிறார்.  

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதனைப்  போலவே, அணிக்கு திரும்பியுள்ள ரெய்னா மற்றும் ஜடேஜா ஆகியோர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மீண்டும் இணைந்தற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் வீடியோக்களும் தற்போது வெளியாகி உள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com