\
தமிழக வீரருக்கு ஐதராபாத் அணியில் வாய்ப்பு : பெங்களூரில் பலவீனமான மிடில் ஆர்டரா ?

தமிழக வீரருக்கு ஐதராபாத் அணியில் வாய்ப்பு : பெங்களூரில் பலவீனமான மிடில் ஆர்டரா ?

தமிழக வீரருக்கு ஐதராபாத் அணியில் வாய்ப்பு : பெங்களூரில் பலவீனமான மிடில் ஆர்டரா ?
Published on: 

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் தமிழக வீரர் நடராஜனுக்கு ஐதராபாத் அணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரின் 3வது லீக் போட்டியில் இன்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் ஐதராபாத் அணி டாஸ் வென்று, முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இதனால் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.

பெங்களூரு அணியில் தேவ்தத் படிக்கல் என்பவரை ஓபனிங் வீரராக தேர்வு செய்துள்ளனர். மிடில் ஆர்டரில் ஜாஸ் பிலிப்பே, சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. சன்ரைசர்ஸ் அணியில் மிட்ஜெல் மார்ஸ், பிரியம் கார்க், அபிஷேக் ஷர்மா ஆகியோர் மிடில் ஆர்டரில் களமிறக்கப்படவுள்ளனர். பவுலிங்கில் தமிழக வீரர் டி நடராஜனுக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. இரண்டு வருடங்களாக இவருக்கு வாய்ப்பு அளிக்காமல் இருந்த நிலையில், தற்போது புதிய தெம்புடன் களமிறங்கியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com