ஐ.எஸ்.எல். கால்பந்து: ஹைதராபாத் அணி வெற்றி

ஐ.எஸ்.எல். கால்பந்து: ஹைதராபாத் அணி வெற்றி
ஐ.எஸ்.எல். கால்பந்து: ஹைதராபாத் அணி வெற்றி

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் 2-வது அரையிறுதி ஆட்டத்தின் முதல் லீக் போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கிய 8-வது ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர், அரையிறுதியை எட்டியுள்ளது. 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ள நிலையில், லீக் முறையில் போட்டிகள் நடைபெறுகின்றன. நேற்று நடைபெற்ற 2-வது அரையிறுதியின் முதலாவது லீக் ஆட்டத்தில் ஹைதரபாத் அணி ஏடிகே மொகன் பெகான் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது லீக் போட்டி வருகிற புதன்கிழமை நடைபெறுகிறது. 2 போட்டிகளிலும் சேர்த்து அதிக கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். முதலாவது அரையிறுதின் முதலாவது லீக் போட்டியில், கேரளா பிளாஸ்டர்ஸ் அணி, 1-0 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தியது. இந்த இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது லீக் போட்டி, செவ்வாக்கிழமை நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com