\
ஐபிஎல்: ஹைதராபாத் வீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி

ஐபிஎல்: ஹைதராபாத் வீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி

ஐபிஎல்: ஹைதராபாத் வீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி
Published on

ஐபிஎல் தொடரில் விளையாடும் ஹைதராபாத் அணிவீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சார்பில் விளையாடும் வீரர் நடராஜனுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அவருடன் தொடர்பில் இருந்த விஜய் சங்கர் உட்பட 6 வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனையடுத்து வீரர்களுக்கு ஆர்டி-பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியுடன் இன்று விளையாடவிருக்கும் நிலையில் போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி போட்டி நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com