ஐபிஎல் 2022: ஆட்டத்தை நேரில் காண டிக்கெட் வாங்குவது எப்படி?

ஐபிஎல் 2022: ஆட்டத்தை நேரில் காண டிக்கெட் வாங்குவது எப்படி?
ஐபிஎல் 2022: ஆட்டத்தை நேரில் காண டிக்கெட் வாங்குவது எப்படி?

வரும் சனிக்கிழமை அன்று கோலாகலமாக ஆரம்பமாக உள்ள 15-வது ஐபிஎல் சீசனின் லீக் சுற்று போட்டிகள் (70 போட்டிகள்) அனைத்தும் நான்கு மைதானங்களில் மட்டுமே நடைபெற உள்ளன. மும்பையில் உள்ள வான்கடே மைதானம், பிரபோர்ன் (Brabourne) மைதானம், நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானம் மற்றும் புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானம் ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெறுகிறது. 

இந்த சீசனில் மொத்தம் 10 அணிகள் விளையாடுகின்றன. கொரோனா பரவல் காரணமாக பார்வையாளர்களுக்கு அனுமதி கிடைக்குமா? கிடைக்காதா? என்ற கேள்வி இருந்த நிலையில் ஒவ்வொரு மைதானத்திலும் மொத்த பார்வையாளர்கள் எண்ணிக்கையில் 25% பேரை அனுமதிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. அதாவது வான்கடே மைதானத்தில் 33,108 பார்வையாளர்கள் ஒரே நேரத்தில் போட்டியை நேரில் காணலாம். அந்த எண்ணிக்கையில் தற்போது 25 சதவிகிதமான 8,277 பேருக்கு அனுமதி அளித்துள்ளது பிசிசிஐ. 

ஆட்டத்தை நேரில் காண டிக்கெட் வாங்குவது எப்படி?

மார்ச் 23 (இன்று) பகல் 12 மணியிலிருந்து ரசிகர்கள்  www.iplt20.com மற்றும் www.BookMyShow.com ஆகிய தளங்களில் லீக் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என பிசிசிஐ வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 800 ரூபாயில் தொடங்கி 3000 ரூபாய் வரை டிக்கெட்டுகள் இருப்பதாக மேற்கூறப்பட்டுள்ள தளங்களில் ஒவ்வொரு போட்டிக்குமான டிக்கெட் விலை டிஸ்பிளே ஆகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com