புதிய ஜெர்ஸியில் இந்திய வீரர்கள்: பர்ஸ்ட் லுக் எப்படி?
இந்திய கிரிக்கெட் வீரர்கள் புதிய ஜெர்ஸி அணிந்திருக்கும் பர்ஸ்ட் லுக் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
உலக கோப்பை தொடர், தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அரையிறுதி சுற்றுக்குள் ஆஸ்திரேலிய அணி, ஏற்கனவே நுழைந்துவிட்டது. இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்திய அணி, நாளை இங்கிலாந்துக்கு எதிராக நடக்கும் போட்டியில் வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துவிடும்.
இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிராக நாளை நடக்கும் போட்டியில், இந்திய அணி புதிய ஜெர்ஸியுடன் விளையாடுகிறது. நீல நிற ஜெர்ஸிக்கு பதிலாக, ஆரஞ்சு நிற ஜெர்ஸி இந்திய அணிக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஜெர்ஸியை இந்திய கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. புதிய ஜெர்ஸியுடன் இந்திய வீரர்கள் இருக்கும் புகைப் படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
இதை வரவேற்றும் எதிர்த்தும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிற ஜெர்ஸியின் புகைப்படத்தை வெளி யிட்டு, ரசிகர்கள் சிலர் ’நாடு எங்கே போகிறது?’ என்று கேட்டுள்ளனர். மற்றும் சிலர் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உடை போல உள்ளது என்று கிண்டலடித்துள்ளனர். சிலர், ஸ்விக்கி ஊழியரின் உடையை குறிப்பிட்டு, கலாய்த்துள்ளனர்.