உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் - தொடர் வெற்றியால் இந்திய அணிக்கு வாய்ப்பு பிரகாசம்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் - தொடர் வெற்றியால் இந்திய அணிக்கு வாய்ப்பு பிரகாசம்?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் - தொடர் வெற்றியால் இந்திய அணிக்கு வாய்ப்பு பிரகாசம்?

இந்திய அணி இன்னும் ஒரு டெஸ்ட் போட்டியை வென்றால் கூட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை உறுதி செய்து விடும்.


இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட 'பார்டர்-கவாஸ்கர் டிராபி' டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட்டில் இந்தியா வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. இப்போட்டியில் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. மூன்றாவது டெஸ்ட் இந்துாரில் மார்ச் 1ல் துவங்குகிறது.

இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் தற்போது ஆஸ்திரேலிய அணி 66.7 சதவீதத்துடன் முதல் இடத்தில் இருக்கிறது. இந்திய அணி 64.6 சதவீதத்துடன் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. இலங்கை அணி 53 சதவீதத்துடன் தற்போது மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இந்தியா 2 வது டெஸ்டில் பெற்ற வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணிக்கு  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிச் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு பறிபோனது. ஒருவேளை எஞ்சிய இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்தியா தோற்றால் கூட தென்னாப்பிரிக்கா பெறும் புள்ளிகளை விட இந்திய அணி குறைவாக பெறாது.

அதேசமயம் வெஸ்ட் இண்டீஸ் தொடரை தென்னாபிரிக்க அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றினாலும் அவர்களால் இந்தியாவின் புள்ளிகளை அடைய முடியாது. இதன் காரணமாக தற்போது ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை ஆகிய மூன்று அணிகள் இடையே மட்டும்தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற போட்டி நிலவுகிறது. இந்திய அணி இன்னும் ஒரு டெஸ்ட் போட்டியை வென்றால் கூட இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை உறுதி செய்து விடும்.

ஆஸ்திரேலிய அணி ஏறக்குறைய இறுதி போட்டியில் இருந்தால் கூட இந்தியாவிடம் தொடரை 4-0 என்ற கணக்கில் தோற்று, அதே சமயம் இலங்கை அணி நியூசிலாந்தை 2-0 என்ற கணக்கில் வென்றால் ஆஸ்திரேலிய அணி வெளியேறிவிடும். இலங்கை அணி இறுதிச்சுற்றுக்கு சென்று விடும். ஆனால் அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என கருதப்படுகிறது. ஒருவேளை இந்திய அணி கடைசி இரு டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவும் என்று வைத்துக் கொள்வோம். இலங்கை அணி நியூசிலாந்திடம் இரண்டு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தோல்வியை தழுவினால் அப்போதும் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இறுதிச்சுற்றுக்கு செல்லும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com