உலக ஹாக்கி லீக் தொடரில் இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது.
உலக ஹாக்கி லீக் தொடர் இந்தியாவின் புவனேஷ்வர் நகரில் நடைபெற்று வருகின்றது. அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணி ஜெர்மனியையும், அர்ஜென்டினா அணி, இந்தியாவையும் தோற்கடித்து இறுதிபோட்டிக்கு முன்னேறின.
புவனேஷ்வரில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா - ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன.
இதனிடையே, வெண்கலப் பதக்கத்திற்காக போட்டியில் இந்தியா மற்றும் ஜெர்மன் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்றது.