உலக ஹாக்கி லீக் தொடரில் இன்று நடைபெறும் பட்டத்திற்கான போட்டியில் அர்ஜென்டினா அணியை எதிர்த்து ஆஸ்திரேலிய அணி விளையாடுகிறது.
உலக ஹாக்கி லீக் தொடர் புவனேஷ்வரில் நடைப்பெற்று வருகின்றது. அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணி ஜெர்மனி அணியையும், அர்ஜென்டினா அணி, இந்திய அணியையும் தோற்கடித்து இறுதிபோட்டிக்கு முன்னேறின.
புவனேஷ்வரில் இன்று நடைபெறும் பட்டத்திற்கான போட்டியில் அர்ஜென்டினா அணியை எதிர்த்து ஆஸ்திரேலிய அணி விளையாடுகிறது. இந்தப்போட்டி இரவு 7.30 மணிக்குத் தொடங்குகிறது. முன்னதாக நடைபெறும் வெண்கலப்பதக்கத்திற்காக போட்டியில் இந்திய அணி, ஜெர்மனி அணியை எதிர்த்து விளையாடுகிறது.