உலகக் கோப்பை ஹாக்கி : வெற்றியுடன் தொடங்கிய இந்தியா

உலகக் கோப்பை ஹாக்கி : வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
உலகக் கோப்பை ஹாக்கி : வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
Published on

ஹாக்கி உலகக் கோப்பையின் முதல் போட்டியை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

14வது ஹாக்கி உலகக்கோப்பை இந்தியாவில் இன்று தொடங்கியது. இந்த தொடரில் இந்தியா, பெல்ஜியம், கனடா, தென் ஆப்ரிக்கா, அர்ஜென்டினா, நியூசிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அயர்லாந்து, சீனா, நெதர்லாந்து, ஜெர்மனி, மலேசியா, பாகிஸ்தான் என மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த அணிகளை வரிசைப்படி நான்கு, நான்காக பிரித்து அதனை ஏ,பி,சி,டி என நான்கு பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் மற்ற மூன்று அணிகளை வீழ்த்தி முதலிடம் பிடிக்கும் அணி காலியிறுதிக்கு தகுதி பெறும்.

இந்நிலையில் இன்று இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் போட்டி புவனேஸ்வர், கலிங்கா மைதானத்தில் நடைபெற்றது. இந்திய அணியுடன் ஒப்பிடுகையில் தென்னாப்பிரிக்க எளிமையான அணி என்றாலும், அதனை குறைத்து மதிப்பிடாமல் வெற்றியடைந்து உலகக் கோப்பையை தொடங்குவோம் என இந்திய அணிக் கேப்டன் மன்பிரீத் சிங் தெரிவித்திருந்தார்.

அவர் கூறியது போலவே, தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக சிறந்த ஆட்டத்தை இந்தியா வெளிப்படுத்தியது. ஆட்ட நேர முடிவில் 5-0 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. இந்திய அணியில் மன்தீப் சிங், அகாஷ்தீப் சிங், லலித் உபாத்யாஹெ ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். சிம்ராஞ்ஜீத் சிங் மட்டும் இரண்டு கோல் அடித்து அசத்தினார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com