ஹாக்கி அணி தலைமை பயிற்சியாளர் அதிரடி நீக்கம்

ஹாக்கி அணி தலைமை பயிற்சியாளர் அதிரடி நீக்கம்
ஹாக்கி அணி தலைமை பயிற்சியாளர் அதிரடி நீக்கம்

இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளர் ரோலண்ட் ஓல்ட்மான்ஸ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

ஹாக்கி இந்தியாவின் உயர் செயல்திறன் மற்றும் மேம்பாட்டுக் குழு கடந்த மூன்று நாட்களாக ஆலோசனை நடத்தியது. இதில் குழுவின் 24 உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஆலோசனை செய்தனர். இந்த ஆலோசனையின் முடிவில் தலைமை பயிற்சியாளர் ரோலண்ட் ஓல்ட்மான்சை பதவி நீக்கம் செய்ய இன்று முடிவு எடுக்கப்பட்டது.

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ரோலண்ட் ஓல்ட்மான்ஸ் கடந்த 2015ம் ஆண்டு இந்திய ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளாராக நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் ஹாக்கி அணி சிறப்பாக செயல்பட்டு வந்தது. இருப்பினும் கடந்த இரண்டு ஆண்டுகளில் அணி குறிப்பிடத்தக்க எந்த வெற்றியும் பெறவில்லை. இதனால் புதிய பயிற்சியாளரை தேர்வு செய்யும் வரை உயர் செயல்திறன் குழு இயக்குனர் டேவிட் ஜான் இடைக்கால பயிற்சியாளராக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com