வீரர்களுக்கான உணவில் பூச்சிகள், முடி: இந்திய ஹாக்கி பயிற்சியாளர் புகார்
இந்தியாவை பொறுத்தவரை பொதுவாக கிரிக்கெட் தவிர பிற விளையாட்டு வீரர்கள் அதிகமாக கவனிக்கப்படுவதில்லை. ஒவ்வொரு விளையாட்டு போட்டிகளுக்கும் அதற்கென தனியாக ஒரு சங்கம் உள்ளது. இதனை நிர்வகிக்க நிர்வாகிகள் உள்ளனர். இருந்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றனர். ஒரு பக்கம் கிரிக்கெட் மோகத்தால் ரசிகர்கள் பிற விளையாட்டுகளில் அதிக ஆர்வம் செலுத்துவதில்லை. தேசிய அணி பங்கேற்கும் போட்டிகளை காண்பதற்கு இங்கு ஆட்கள் இல்லை. இந்தக்குறையை தான் கடந்த சில தினங்களுக்கு முன் இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி தனது ட்விட்டர் பக்கத்தில் இரு உருக்கமான பதிவிட்டிருந்தார். அதற்கு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்தனர். அதன்பின்னர் நடைப்பெற்ற போட்டிகளுக்கு மைதானத்தில் ரசிகர்கள் குவித்தனர். இண்டெர்காண்டினல் கோப்பை இந்தியக் கால்பந்து அணியை வென்றது.
இந்நிலையில் இந்தியக் ஹாக்கி அணியின் பயிற்சியாளர் ஹரேந்திரா சிங், பெங்களூருவில் உள்ள இந்தியா விளையாட்டு கழக மையத்தில் வீரர்களுக்கு சுகாதாரமற்ற உணவு வழங்குவதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் இந்திய ஹாக்கி அணி நிர்வாகிகளுக்கு எழுதிய கடிதத்தில், வீரர்களுக்கு அதிக எண்ணெய் கொண்ட பொருட்கள் வழங்கப்படுவதாகவும், அசைவ உணவுகளில் எலும்புகளே அதிகம் இருப்பதாக கூறியுள்ளார். மேலும் வழங்கப்படும் உணவுகளும் சுகாதாரமற்று காணப்படுவதாகவும், உணவுகளில் பூச்சிகள், தலைமுடிகள் காணப்படுவதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.
நாங்கள் எதிர்வரும் சாம்பின்ஸ் டிராபி, ஆசிய விளையாட்டு போட்டிகள் மற்றும் உலகக்கோப்பை தொடர்களுக்கு தயாராகி வருகிறோம். இந்தப்போட்டிகளில் வீரர்கள் சிறப்பாக செயல்பட அவர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகள் வழங்கப்பட வேண்டும். சமீபத்தில் 48 வீரர்களின் ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் நிறைய வீரர்களுக்கு உணவு தொடர்பான குறைபாடுகள் உள்ளது எனக் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி நெதர்லாந்தில் நடைபெறவுள்ள சாம்பினஸ் டிராபி போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. இதற்காக பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு கழக மையத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளர் இந்தக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.