ஆசியக் கோப்பை ஹாக்கி: பங்களாதேஷை பந்தாடியது இந்தியா

ஆசியக் கோப்பை ஹாக்கி: பங்களாதேஷை பந்தாடியது இந்தியா

ஆசியக் கோப்பை ஹாக்கி: பங்களாதேஷை பந்தாடியது இந்தியா
Published on

ஆசியக்கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

ஆசியக்கோப்பை ஹாக்கி தொடர் பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, ஜப்பான், பங்களாதேஷ், பாகிஸ்தான் அணிகள் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளன. இந்திய அணி, டாக்காவில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பங்களாதேஷ் ‌அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் இந்தியா 7-0 என்ற கோல் கணக்கில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தியது. இந்திய அணியில் ஹர்மன்பிரீத் சிங் இரண்டு கோல்கள் அடித்தார். தொடர்ந்து 2 வெற்றிகளை பெற்ற‌ இந்திய அணி ‌தனது பிரிவில் முதலிடத்திற்கு முன்னேறியது. விளையாடிய இரண்டிலும் தோல்வி அடைந்ததால், பங்களாதேஷ் அணி அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது. இந்திய அணி கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை நாளை எதிர்கொள்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com