\
ஐஓசி அதிகாரி ஆனார் தடகள வீராங்கனை ஹிமா தாஸ்

ஐஓசி அதிகாரி ஆனார் தடகள வீராங்கனை ஹிமா தாஸ்

ஐஓசி அதிகாரி ஆனார் தடகள வீராங்கனை ஹிமா தாஸ்
Published on

தடகள வீராங்கனை ஹிமா தாஸூக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் அதிகாரி அந்தஸ்தில் வேலை வாய்ப்பு வழங்கியுள்ளது. 
 
அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் தடகள வீராங்கனை ஹிமா தாஸ். உலக ஜூனியர் தடகள போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தவர் இவர். ஆசிய விளையாட்டு போட்டியில் ஒரு தங்கமும், 2 வெள்ளியும் வென்றுள்ளார். அவரை கவுரவிக்கும் பொருட்டு இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் (ஐ.ஓ.சி.) நிறுவனம், அதிகாரி அந்தஸ்தில் வேலை வாய்ப்பு வழங்கியுள்ளது. 

இது தொடர்பாக ஐ.ஓ.சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எங்களது குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக ஹிமாவை இணைத்துக் கொள்வதில் பெருமை கொள்கிறோம். வருங்காலத்தில் அவர் மேலும் பல வெற்றிகளை குவிக்கும் போது எங்களது நிறுவனத்தின் மதிப்பும் உயரும்’ என்று தெரிவித்துள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com