''கடுமையான பாதிப்பில் அசாம்: அனைவரும் உதவுங்கள்'' - ஹீமா தாஸ் வேண்டுகோள்

''கடுமையான பாதிப்பில் அசாம்: அனைவரும் உதவுங்கள்'' - ஹீமா தாஸ் வேண்டுகோள்

''கடுமையான பாதிப்பில் அசாம்: அனைவரும் உதவுங்கள்'' - ஹீமா தாஸ் வேண்டுகோள்
Published on

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாம் மக்களுக்கு அனைவரும் உதவ வேண்டுமென தடகள வீராங்கனை ஹீமா தாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்

 பருவமழையால் அசாம் மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருகின்றது. இதனால் லட்சுமிபூர், சோனித்பூர், ஜோர்ஹாட், திப்ருகார், சிவசாகர் உள்ளிட்ட 30 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதில் பலர் உயிரிழந்த நிலையில் ‌15 லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் அசாம் மக்களுக்கு அனைவரும் உதவ வேண்டுமென அசாம் மாநிலத்தை சேர்ந்த தடகள வீராங்கனை ஹீமா தாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். 

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ''அசாம் மாநிலத்தில் வெள்ளத்தின் பாதிப்பு கடுமையாக உள்ளது. 30 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கடுமையான சூழ்நிலையில் பெரிய நிறுவனங்களையும், மக்களையும் அசாம் மாநிலத்துக்கு உதவ வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னுடைய மாதச் சம்பளத்தில் பாதியை அசாம் வெள்ள நிவாரணத்துக்காக ஹீமா தாஸ் கொடுத்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com