\
ஐஎஸ்எல் கால்பந்து: டிராவில் முடிந்த சென்னை ஆட்டம்

ஐஎஸ்எல் கால்பந்து: டிராவில் முடிந்த சென்னை ஆட்டம்

ஐஎஸ்எல் கால்பந்து: டிராவில் முடிந்த சென்னை ஆட்டம்
Published on: 

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி அணிக்கும் டெல்லி டைனமோஸ் அணிக்கும் எதிரான ஆட்டம் சமனில் முடிந்தது.

நான்காவது ஐஎஸ்எல் கால்பந்து போட்டி இந்தியாவில் நடைப்பெற்று வருகிறது. இதில் தற்போது லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.  நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னையின் எஃப்சி அணியும், டெல்லி டைனமோஸ் அணியும் மோதின. இந்தப்போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன.

இதனையடுத்து ஆட்டம் விறுவிறுப்படைந்தது . ஆட்டத்தின் 51வது நிமிடத்தில் சென்னை அணி கோல் அடித்து முன்னிலை பெற்றது. ஆட்டம் முடியும் தருவாயில் டெல்லி வீரர்கள் கோல் அடித்து சென்னை அணிக்கு அதிர்ச்சி கொடுத்தனர். முடிவில் இந்தப்போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் ஆட்டம் சமனில் முடிந்தது. இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 5வெற்றி 2சமன் 2தோல்விகளுடன் 17 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com