விளையாட்டு
400 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஹெராத் - கபில்தேவ் சாதனை முறியடிப்பு
400 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஹெராத் - கபில்தேவ் சாதனை முறியடிப்பு
இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ரங்கனா ஹெராத், டெஸ்ட் போட்டிகளில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார்.
அபுதாபியில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இலங்கையின் வெற்றிக்கு ஹெராத் எடுத்த 11 விக்கெட்டுகள் உறுதுணையாக இருந்தது. இந்த போட்டியில், பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை ஹெராத் படைத்துள்ளார். முன்னதாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் கபில்தேவ் பாகிஸ்தானுக்கு எதிராக 99 விக்கெட்டுகள் வீழ்த்தியதே இதுவரை சாதனையாக இருந்தது. தற்போது ஹெராத் பாகிஸ்தானுக்கு எதிராக மொத்தம் 101 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.
ஹெராத் எட்டியுள்ள சில மைல்கல்கள்:-
- 400 வீக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இடது கை பந்துவீச்சாளர்
- முரளிதரனை தொடர்ந்து 400 விக்கெட்டுகள் வீழ்த்திய இரண்டாவது இலங்கை வீரர்
- 39 வயதில் 400 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 38 வயதில் நியூசிலாந்து வீரர் சர் ரிச்சர்டு ஹாட்லீ 400 விக்கெட்டுகள் வீழ்த்தியதே சாதனையாக உள்ளது
- டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 400 விக்கெட்டுகள் வீழ்த்திய 14-வது வீரர்
- பாகிஸ்தானுக்கு எதிராக 101 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை
- 9-வது முறையாக டெஸ்ட் போட்டிகளில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார் - 33 முறை 5 விக்கெட்டுகள்
- முரளிதரன், ஷேன் வார்னே, கும்ளே, ஹர்பஜன் சிங் ஆகியோரை தொடர்ந்து 5-வது வீரராக 400 வீக்கெட்டுகள் வீழ்த்திய சுழற்பந்துவீச்சாளர்
- வேகமாக 400 விக்கெட்டுகள் வீழ்த்திய 4-வது வீரர் ஹெராத் (84 போட்டிகள்)