சிரியாவில் இருந்து ஒரு 'சிறிய' நாயகி: டேபிள் டென்னிஸில் பங்கேற்கும் 12 வயது ஸாஸா

சிரியாவில் இருந்து ஒரு 'சிறிய' நாயகி: டேபிள் டென்னிஸில் பங்கேற்கும் 12 வயது ஸாஸா
சிரியாவில் இருந்து ஒரு 'சிறிய' நாயகி: டேபிள் டென்னிஸில் பங்கேற்கும் 12 வயது ஸாஸா

டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் மிக இளம் வயதுக்காரராக இருக்கிறார் சிரியாவைச் சேர்ந்த இளம் டேபிள் டென்னிஸ் வீராங்கனை ஹெண்ட் ஸாஸா.

உள்நாட்டு போரால் சிக்கி சிதறுண்ட சிரியாவில் இருந்து ஆச்சரியம் அளிக்கும் வகையில் சர்வதேச டேபிள் டென்னிஸ் நாயகியாக உருவாகி இருக்கிறார் ஹெண்ட் ஸாஸா. 12 வயதேயான ஹெண்ட் ஸாஸா-வின் ஆட்டத்திறன் சர்வதேச டேபிள் டென்னிஸ் ரசிகர்களை மலைக்க வைக்கிறது.

கடந்த ஆண்டு உள்ளூர் கிளப் போட்டிகளில் பங்கேற்க தொடங்கிய அவர், தமது சிறப்பான ஆற்றலால் ஒலிம்பிக் போட்டிக்கான சிரியா நாட்டு அணியில் இடம்பிடித்தார். பிற விளையாட்டுகளை இருப்பதுபோன்று டேபிள் டென்னிஸ் போட்டிகளில் தொடங்குவதற்கு, குறைந்தபட்ச வயது நிர்ணயம் கிடையாது. இதுவே ஒலிம்பிக் போட்டியில் ஹெண்ட் ஸாஸா பங்கேற்க ஏதுவாக அமைந்தது. மேலும், மேற்கு ஆசிய நாடுகளுக்கு இடையான ஒலிம்பிக் தகுதி சுற்றுப்போட்டியில் 42 வயது அனுபவ வீராங்கனை ஒருவரை வீழ்த்தி அசத்தியிருக்கிறார் இந்த 12 வயதுச் சிறுமி.

உள்நாட்டில் நடைபெற்ற தேசிய சாம்பியன்ஷிப் போட்டியிலும் பட்டம் பென்றிருக்கிறார் ஹெண்ட் ஸாஸா. ஹெண்ட் ஸாஸா ஒலிம்பிக்கில் விளையாட உள்ளதை ஒரு மைல் கல் சாதனையாகவே பார்க்கிறது சிரியா. சீனா, தென்கொரியா, ஜப்பான் நாட்டு ஜாம்பவான் வீராங்கனைகளுக்கு மத்தியில் ஒலிம்பிக்கில் ஹெண்ட் ஸாஸா-வால் எந்தளவிற்கு ஜொலிக்க முடியும் என்பது தெரியவில்லை. அதேவேளையில் ஹெண்ட் ஸாஸா பங்கேற்பையே பதக்கம் வென்றதற்கு ஈடாக பார்க்கிறது சிரியா ஒலிம்பிக் குழு.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com