சிஎஸ்கேவின் அடுத்தப் போட்டி: சேப்பாக்கத்தில் தொடங்கியது டிக்கெட் விற்பனை

சிஎஸ்கேவின் அடுத்தப் போட்டி: சேப்பாக்கத்தில் தொடங்கியது டிக்கெட் விற்பனை
சிஎஸ்கேவின் அடுத்தப் போட்டி: சேப்பாக்கத்தில் தொடங்கியது டிக்கெட் விற்பனை

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள இரண்டாவது போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை  8.45 மணி முதல் தொடங்கியது.

12-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கி மே மாதம் வரை பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), ஐதராபாத் சன் ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர்-வெளியூர் அடிப்படையில் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும். அதில் வெல்லும் அணிகள் இறுதி போட்டிக்குச் செல்லும்.

சென்னை அணி தனது முதல் போட்டியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பெங்களூர் அணிக்கு எதிராக விளையாடியது. அந்த போட்டியில் எளிதாக வெற்றி பெற்றது சென்னை. இந்நிலையில் இரண்டாவது போட்டி இன்று டெல்லியில் நடைபெறுகிறது. வரும் 31ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தனது அடுத்த போட்டியை சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடவுள்ளது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சென்னை விளையாடவுள்ளது.

இந்நிலையில் சென்னை - ராஜஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை  8.45 மணி முதல் தொடங்கியது. கவுன்டர் முறை மற்றும் ஆன்லைன் முறை ஆகிய இரண்டு விற்பனையும் இன்று காலை தொடங்கியது. ரசிகர்கள் நீண்ட வரிசையில் அதிகாலை முதலே காத்திருந்து டிக்கெட்டுகளை பெற்று வருகின்றனர்.

சென்னை அணியின் விளையாட்டை பார்க்க சென்னை ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருவதால் சில மணி நேரங்களில் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் போட்டிக்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.1300ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com