"பவுலிங்கில் மிரட்டும் அந்த வீரர் நிச்சயம் இந்திய அணிக்கு செல்வார்" - கவாஸ்கர் ஆருடம்

"பவுலிங்கில் மிரட்டும் அந்த வீரர் நிச்சயம் இந்திய அணிக்கு செல்வார்" - கவாஸ்கர் ஆருடம்
"பவுலிங்கில் மிரட்டும் அந்த வீரர் நிச்சயம் இந்திய அணிக்கு செல்வார்" - கவாஸ்கர் ஆருடம்

சன்ரைசர்ஸ் அணியில் மிரட்டி வரும் இளம் வீரரான உம்ரான் மாலிக், விரைவில் இந்திய அணிக்கு விளையாடுவார் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

2022-ம் ஆண்டுக்கான 15-வது சீசன் ஐபிஎல் போட்டி, மகாராஷ்டிரா மாநிலத்தில், மும்பை, நவி மும்பை, புனே ஆகிய இடங்களில் உள்ள 4 மைதானங்களில், கடந்த 26-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. புதிதாக இரண்டு அணிகள் இந்த வருடம் சேர்க்கப்பட்டுள்ளன. இதுவரை 30 சூப்பர் லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன.

இதில் நடப்பு சாம்பியனும், நான்கு முறை கோப்பை வென்ற சென்னை அணி சூப்பர் கிங்ஸ் அணியும், 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியும், மோசமான பார்மில் உள்ளது. இந்த இரு அணிகளும் படுதோல்விகளை சந்திப்பதற்கு வலுவான பௌலர்கள் மற்றும் மிடில் ஆர்டர் சொதப்பல்களே காரணமாக கூறப்படுகிறது.

இந்நிலையில், முதல் 2 போட்டிகளில் தோல்விகளை சந்தித்தாலும், அடுத்தடுத்து 4 போட்டிகளில் வெற்றியடைந்து தற்போது சன்ரைசர்ஸ் அணி நல்ல பார்மில் உள்ளது. இதுவைரை ஆடிய 6 போட்டிகளில் 2 தோல்வி, 4 வெற்றி என அந்த அணி 8 புள்ளிகளுடன், புள்ளிப் பட்டியலில் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக பேட்டிங் எனக் கூறப்பட்டாலும், உண்மையில் அந்த அணி தற்போது வலுவான யார்க்கர் வீசும் பௌலர்களை கொண்டுள்ளது.

குறிப்பாக ஜம்மு காஷ்மீரை சேர்ந்த அந்த அணியின் இளம் வீரரான உம்ரான் மாலிக், தனது வேகத்தாலும், பந்துவீசும் நுணுக்கத்திலும் அனைவரையும் கவர்ந்து வருகிறார். குடைசியாக பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில், உம்ரான் மாலிக் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினார். குறிப்பாக கடைசி ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில், விரைவில் இந்திய அணிக்காக உம்ரான் மாலிக் விளையாடுவார் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, “அவரின் பந்துவீச்சு வேகம் அனைவரையும் கவருவதாக உள்ளது. மற்ற வீரர்கள் அவரைப்போல 150 கி.மீ வேகத்துக்கு பந்துவீசினால் பந்து வைடை (wide) நோக்கி செல்வதற்கு வாய்ப்பு அதிகமாக இருக்கும்.

ஆனால், அவர் குறைந்த அளவே வைட் பந்துக்களை வீசுகிறார். லெக் சைட்டில் அவர் வைட் பந்துக்களை கட்டுப்படுத்தினால் அற்புதமான பந்துவீச்சாளராக வருவார். மேலும் அவர், எல்லா நேரங்களிலும், ஸ்டம்புகளை நோக்கியே பந்து வீசுகிறார். அவருடைய வேகத்துக்கு ஸ்டம்புகளை நோக்கி நேராக பந்து வீசுவது எளிதான விஷயமல்ல. ஒருநாள் நிச்சயமாக இந்திய அணிக்காக உம்ரான் மாலிக் விளையாடுவார்” இவ்வாறு சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சுனில் கவாஸ்கரை தொடர்ந்து முத்தையா முரளிதரன் மற்றும் சன்ரைசர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் உள்ளிட்ட வீரர்களும் உம்ரான் மாலிக்கை பாராட்டியுள்ளனர். வரும் சனிக்கிழமை சன்ரைசர்ஸ் அணி, பெங்களூரு அணியுடன் மோதுகின்றது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com