'வாஷிங்டன் சுந்தர் இந்திய அணிக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம்' - புகழ்ந்து தள்ளிய முன்னாள் வீரர்

'வாஷிங்டன் சுந்தர் இந்திய அணிக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம்' - புகழ்ந்து தள்ளிய முன்னாள் வீரர்
'வாஷிங்டன் சுந்தர் இந்திய அணிக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம்' - புகழ்ந்து தள்ளிய முன்னாள் வீரர்

வாஷிங்டன் சுந்தருக்கு இந்திய அணியில் நல்ல எதிர்காலம் இருப்பதாக பாராட்டியுள்ளார் முன்னாள் வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன்.

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த ஆல்ரவுண்டராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார் வாஷிங்டன் சுந்தர். நியூசிலாந்து மண்ணில் 2 ஒருநாள் போட்டியில் அரைச்சதம் விளாசியதோடு பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டார். இந்நிலையில் வாஷிங்டன் சுந்தருக்கு இந்திய அணியில் நல்ல எதிர்காலம் இருப்பதாக பாராட்டியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன்.

சோனி ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன், "வாஷிங்டன் சுந்தருக்கு இந்திய அணியில் நல்ல எதிர்காலம் உள்ளது. அவர் நாம் கண்டுபிடித்த ஒரு பொக்கிஷம். அவர் எந்த நிலையிலும் பேட் செய்யலாம். ரன் குவிக்க அவரை தாராளமாக நம்பலாம். ஹர்திக் பாண்டியாவைப் போல் வாஷிங்டன் சுந்தரை 5வது அல்லது 6வது இடத்தில் இறக்கலாம். ஹர்திக் பாண்டியாவை நீங்கள் சீம் பவுலிங் ஆல்-ரவுண்டர் என்று அழைத்தால், நான் வாஷிங்டன் சுந்தரை ஸ்பின் ஆல்-ரவுண்டர் என்று அழைப்பேன்.

களத்தில் வாஷிங்டன் சுந்தர் 'செட்' ஆகிவிட்டால் நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் அவரால் ரன் குவிக்க முடியும். அவர் மிகவும் திறமையான வீரர் மற்றும் மிடில் ஆர்டரை வலுப்படுத்த அவர் ஒரு சிறந்த வழி.  10 ஓவர்கள் வீசும் திறன் கொண்டவர். இருப்பினும் விக்கெட் எடுப்பதில் அவர் இன்னமும் உழைக்க வேண்டும். வாஷிங்டன் சுந்தர் ஒரு அருமையான ஆல்-ரவுண்டர். நீங்கள் அவரை எப்படி வளர்த்து வருகிறீர்கள் என்பதுதான் அணியில் அவரது எதிர்காலத்தை தீர்மானிக்கும்" என்றார்.

தவற விடாதீர்: வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்: ரோகித் சர்மாவுக்கு மாற்றாக வரப்போகும் அந்த வீரர் இவர்தானா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com