"என்னை முட்டாளாக்கியவர் இவர்தான்" - கோலியின் ஓபன் டாக் !
ஷேன் வார்னே தன்னுடைய சுழற்பந்து வீச்சு திறமையால் என்னை ஓர் முட்டாளைப் போல உணர வைத்தார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மனம் திறந்து பேசியுள்ளார்.
நாடும் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் அனைவரும் வீட்டில் முடங்கியுள்ளனர். இதில் திரைத்துறை பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்டோர் ஊரடங்கு காலத்தில் தாங்கள் எடுத்த புகைப்படங்கள், வீடியோக்கள், தங்களது அன்றாட நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் "ஈஎஸ்பின் கிரிக்இன்போ" இணையதளத்துக்குப் பேட்டியளித்த விராட் கோலி ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னேவுடனான தன் நினைவுகளை பகிர்ந்துகொண்டார், அப்போது பேசிய அவர் "2009 ஐபில் போட்டியில் அவரது பவுலிங் திறமையால் என்னை முட்டாளாக்கினார் வார்னே. பின்பு 2011 ஐபிஎல் போட்டியின்போது என்னை அவர் அவுட்டாக்கவில்லை, ஆனால் என்னால் அதிக ரன்கள் அவர் பவுலிங்கில் அடிக்க முடியவில்லை" என்றார்.
மேலும் தொடர்ந்த கோலி "போட்டிக்குப் பின்பு என்னிடம் வந்த வார்னே, பேட்டிங் செய்யும்போது பவுலரிடம் ஏதும் பேசாதே என்றார். எப்போதும் போல நான் அவருடைய அறிவுரையை ஏற்கவில்லை" எனத் தெரிவித்துள்ளார். கோலி குறித்துப் பேசிய வார்னே "கோலி போன்ற திறமையானவர்களுக்கு பிட்சின் இருபக்கமும் பந்து வீச வேண்டாம், நேராகப் பந்து வீசினால் அது பவுலர்களுக்கு பாதகமாகவே முடியும்" என்றார்.