"அஸ்வின் 20 வயது அதிகமானவர்போல இருக்கிறார்"- நக்கலடித்த மார்க் புட்சர்
இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின், தன்னுடைய வயதைக் காட்டிலும் 20 வயது அதிகம் இருப்பவர்போலவே பீல்டிங் செய்கிறார் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் மார்க் புட்சர் நக்கலடித்துள்ளார்.
சென்னையில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையே டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 578 ரன்கள் அடித்தது. ஜோ ரூட் இரட்டைச் சதம் விளாசினார். மேலும் பென் ஸ்டோக்ஸ், டோம் சிப்லே ஆகியோர் அரைசதமடித்தனர். இந்தப் போட்டியில் இந்திய அணியின் பீல்டிங் மிக மோசமாகவே இருந்தது. பல கேட்சுகளை இந்திய வீரர்கள் தவறவிட்டனர். இதற்கு முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சனம் வைத்து வருகின்றனர்.
இது குறித்து பேசியுள்ள மார்க் புட்சர் "இந்திய வீரர்கள் அஸ்வின் மிகச்சிறந்த பீல்டர் இல்லை. அவர் மற்றவர்களை காட்டிலும் பீல்டிங்கில் மிகவும் மெதுவாக செயல்படுவார். எனக்கு எப்போதும் அவர் 20 வயது அதிகமுடையவர் போலவே தோற்றமளிக்கிறார். அவரின் பீல்டிங் செயல்பாடுகளிலும் அப்படிதான் இருக்கிறார். இது மட்டுமல்லாமல் அஸ்வின் ஏராளமான ஓவர்களையும் வீசினார். அதனால் அவர் சோர்வுடன் தோன்றியிருக்கலாம். பென் ஸ்டோக்ஸ் அவரை விளாசி தள்ளியபோதும் அவரின் விக்கெட்டை வீழ்த்தினார்" என்றார்.