விளையாட்டு
“கோலியின் சாதனைகளை வெல்லும் திறமை பாபர் அசாமுக்கு உண்டு” - ரமீஸ் ராஜா நம்பிக்கை
“கோலியின் சாதனைகளை வெல்லும் திறமை பாபர் அசாமுக்கு உண்டு” - ரமீஸ் ராஜா நம்பிக்கை
விராட் கோலியின் சாதனைகளை வெல்லும் திறமை பாபர் அசாமிற்கு உள்ளது என்று ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா. அவர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியைக் குறித்து ஒரு கருத்தை முன்வைத்துள்ளார். பாகிஸ்தான் வீரர் பாபர் அசாமிற்குக் கோலியின் சாதனைகளை வெல்லும் ஆற்றல் உள்ளது என்று அவர் கூறியுள்ளார். ஆகவே தனது மனதை லேசாக வைத்துக் கொண்டு நேர்மறையாகச் சிந்திக்கும்படி பாபருக்கு அவர் அறிவுரை கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் பேசிய ரமீஸ் ராஜா, "விராட் கோலியை வெல்லும் ஆற்றல் அவருக்கு உள்ளது. ஆனால் அவர் மனதை இலகுவாக்க வேண்டும். இழப்பதைப் பற்றி சிந்திக்கக்கூடாது. அவர் அதைச் செய்ய வேண்டும். ரன்களை எடுப்பது, வெல்வதைப் பற்றி யோசித்தால், அவர் மிக நீண்ட காலத்திற்கு ஒரு சிறந்த வீரராக இருப்பார் ”என்றார். மேலும் அவர் “பாபர் அசாமைப் பொறுத்தவரை, வானமே எல்லை. ஊக்கமளிக்கும் மற்றும் ஈடுபாட்டுடன் கூடிய சூழலை அவர் பெறும் வரை, அவர் தனது திறனைப் பொறுத்து வாழ முடியாது”என்றும் கூறியுள்ளார்.
“கோலி ஏற்கனவே நிறையச் சாதித்துள்ளார். அவர் தனது நாட்டில் ஒரு லெஜண்ட். நேர்மையாகச் சொன்னால் இப்போது எந்த ஒப்பீடும் என்னிடம் இல்லை, ஆனால் இறுதியில் அவர் இன்றுள்ள இடத்தை நான் பெற விரும்புகிறேன் ”என்று பாபர் அசாம் ஏற்கெனவே ஒருமுறை கூறியிருந்தார்.