“கிரிக்கெட் ‘கிட்’டை தொட்டுப் பார்த்து யுவராஜ் அழுதார்” - யுவராஜ் மனைவி உருக்கம்

“கிரிக்கெட் ‘கிட்’டை தொட்டுப் பார்த்து யுவராஜ் அழுதார்” - யுவராஜ் மனைவி உருக்கம்

“கிரிக்கெட் ‘கிட்’டை தொட்டுப் பார்த்து யுவராஜ் அழுதார்” - யுவராஜ் மனைவி உருக்கம்
Published on

2016ஆம் ஆண்டு இந்திய அணி அனுப்பிய கிரிக்கெட் ‘கிட்’-ஐ தொட்டுப்பார்த்து யுவராஜ் சிங் அழுததாக அவரது மனைவி உருக்கமாக நினைவு கூர்ந்துள்ளார். 

இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் நேற்று தனது ஓய்வை அறிவித்தார். சர்வதேச போட்டிகளில் இருந்த அவர் ஓய்வுப் பெறுவதாக வெளியிட்ட அறிவிப்பு அவரது ரசிகர்கள் கலங்கடித்தது. இந்திய அணி கிரிக்கெட் வீரர்களில் சச்சின், கங்குலி, தோனி ஆகியோருக்கு சற்றும் சளைக்காத வகையில் யுவராஜ் சிங்கிற்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. 

இந்திய அணியின் உலகக் கோப்பை அணியின் அறிவிப்பு வெளியாகியபோது, யுவராஜ் சிங்கை உலகக் கோப்பை அணியில் சேர்த்திருக்காலம் ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். முன்னதாக, புற்றுநோய் பாதிப்பால் யுவராஜ் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகினார். அதன்பின்னர் 2016ஆம் ஆஸ்திரேயாவிற்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்றார்.

அந்த சம்பவத்தை நினைவு கூர்ந்துள்ள யுவராஜ் சிங் மனைவி ஹஷெல் கீச், “ஒரு மனைவியாக அவரிடம் கிரிக்கெட் பிரிவு பற்றி அவரிடம் என்ன சொல்ல முடியும். அவர் ஓய்வு பெற்றதற்கு எனது முழு ஆதரவை அளித்துள்ளேன். யுவராஜ் சிங்கை பார்ப்பதற்கு முன்பு வரை நான் கிரிக்கெட் பார்த்ததில்லை. 2016ஆம் யுவராஜை மீண்டும் அணிக்காக விளையாடுமாறு இந்திய அணி கிட் அனுப்பினர். அதைக்கண்ட யுவராஜ் அழுதார். அவரது உணர்ச்சிகளை அப்போது என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அதை கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே புரிந்துக்கொள்ள முடியும் என நான் நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com