'பாபர் அசாம் ஒரு மோசமான கேப்டன்' - சோயப் அக்தர் காட்டம்

'பாபர் அசாம் ஒரு மோசமான கேப்டன்' - சோயப் அக்தர் காட்டம்
'பாபர் அசாம் ஒரு மோசமான கேப்டன்' - சோயப் அக்தர் காட்டம்

'பாபர் அசாம் ஒரு மோசமான கேப்டன்' என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் விமர்சித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற சூப்பர் 12 சுற்று ஆட்டம் ஒன்றில் வலுவான பாகிஸ்தான் அணி, ஜிம்பாப்வே அணியிடம் ஒரு ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. ஏற்கனவே இந்தியாவுடன் தோல்வியடைந்த நிலையில் தற்போது ஜிம்பாப்வே அணியிடம் வீழ்ந்ததால் பாகிஸ்தான அணி அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு கடினமாகிவிட்டது. இதனால் அந்நாட்டு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் மீதும், அணி நிர்வாகம் மீதும் கடும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்த நிலையில், 'பாபர் அசாம் ஒரு மோசமான கேப்டன்' என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயப் அக்தர் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அக்தர் தனது யூடியூப் சேனலில் பேசுகையில், "உங்களுக்குப் புரிந்துகொள்வது ஏன் கடினமாக இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. இதை நான் முன்பே சொன்னேன், இப்போதும் சொல்கிறேன். டாப் மற்றும் மிடில் ஆர்டர் மூலமே பெரிய வெற்றியைப் பெற முடியும். பாகிஸ்தான் அணிக்கு ஒரு மோசமான கேப்டன் இருக்கிறார். பாகிஸ்தான் உலகக் கோப்பையில் தொடரில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. நாம் தோற்ற ஆட்டங்களில் நவாஸ் கடைசி ஓவரை வீசியிருக்கிறார்.

பாபர் அசாம் நீங்கள் முதலில் பேட்டை கீழே வையுங்கள். உங்களது கேப்டன்சி சரியில்லை. ஷஹீன் ஷா அப்ரிடியின் உடற்தகுதியில் பெரிய குறைபாடு உள்ளது. நாங்கள் உங்களுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுக்க தயாராக இருக்கிறோம். ஆனால் நீங்கள் என்ன மாதிரியான கிரிக்கெட்டை விளையாடுகிறீர்கள்?'' என்று அவர் அடுக்கடுக்காக விமர்சித்தார்.

பாகிஸ்தான் அடுத்தபடியாக நெதர்லாந்து, வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா ஆகிய 3 அணிகளுடன் மோதுகிறது. பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெற மீதமுள்ள 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும், மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளை சார்ந்து இருக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே: ஒரு ரன்னில் வெற்றியை கோட்டை விட்ட பாகிஸ்தான்.. கடைசி ஓவரில் கெத்து காட்டிய ஜிம்பாப்வே!!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com