\
அசுரத்தனமான 'யார்க்கர்' வீசிய பாகிஸ்தான் வீரர் - இரண்டாக உடைந்த 'ஸ்டம்ப்'

அசுரத்தனமான 'யார்க்கர்' வீசிய பாகிஸ்தான் வீரர் - இரண்டாக உடைந்த 'ஸ்டம்ப்'

அசுரத்தனமான 'யார்க்கர்' வீசிய பாகிஸ்தான் வீரர் - இரண்டாக உடைந்த 'ஸ்டம்ப்'
Published on

கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியில் யார்க்கர் சீரிங் மூலம் மிடில் ஸ்டம்பை இரண்டாக உடைத்த ஹசன் அலியின் பந்துவீச்சு பாராட்டை பெற்றுவருகிறது.

கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியில் லங்காஷயர், க்ளூசெஸ்டர்ஷைர் அணிகள் மோதி வருகின்றன. முதல் இன்னிங்சில் க்ளூசெஸ்டர்ஷைர் 252 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. ஹசன் அலியின் அபார பந்துவீச்சு க்ளூசெஸ்டர்ஷைர் அணியை குறைந்த ரன்களுக்குள் சுருட்ட உதவியது. அடுத்து விளையாடிய லங்காஷயர் அணி 7 விக்கெட்டுக்கு 556 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. 2வது இன்னிங்சை க்ளூசெஸ்டர்ஷைர் அணி விளையாட துவங்கிய போதும் அந்த அணிக்கு தலைவலியாக மாறினார்.

ஜேம்ஸ் ப்ரெசிக்கு ஹசன் அலி வீசிய யார்க்கர் பந்து, துல்லியமாக ஸ்டம்பை நோக்கி பாய்ந்தது. மிடில் ஸ்டம்ப் மீது பந்து மோதிய வேகத்தில் அது இரண்டாக உடைந்து சிதறியது. ஜேம்ஸ் பிரேசியை ஹசன் அலி வெளியேற்றிய பரபரப்பான பந்து வீச்சின் வீடியோக்களை லங்காஷயர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. கிரிக்கெட் ரசிகர்கள் பலர் இந்த விக்கெட்டை சிலாகித்து பகிர்ந்து வருகிறார்கள்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com