ஹசன் அலி கலக்கல்: பாகிஸ்தானுக்கு 4 வது வெற்றி!
இலங்கைக்கு எதிரான 4- வது ஒரு நாள் போட்டியிலும் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது.
இலங்கை- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்துவருகிறது. இலங்கை அணி, டெஸ்ட் தொடரை வென்ற நிலையில் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை பாகிஸ்தான் ஏற்கனவே கைப்பற்றிவிட்டது. இந்நிலையில் இந்த அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒரு நாள் போட்டி சார்ஜாவில் நேற்று நடந்தது.
டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்து, 173 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் திரிமன்னே மட்டும் நிலைத்து நின்று ஆடி, 64 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகியினர். பாகிஸ்தான் தரப்பில் ஹசன் அலி சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி, 39 ஓவர்களில் 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பாபர் அசாம், சோயிப் மாலிக் இருவரும் தலா, 69 ரன்கள் எடுத்தனர். பாபர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.