”உங்க பந்துவீச்சையும அடித்து நொறுக்கியுள்ளார்?”-கண்ணை மூடியபடி கோலியை புகழ்ந்த பாக். வீரர்

”உங்க பந்துவீச்சையும அடித்து நொறுக்கியுள்ளார்?”-கண்ணை மூடியபடி கோலியை புகழ்ந்த பாக். வீரர்
”உங்க பந்துவீச்சையும அடித்து நொறுக்கியுள்ளார்?”-கண்ணை மூடியபடி கோலியை புகழ்ந்த பாக். வீரர்

பாகிஸ்தான் தொலைக்காட்சி சேனலில், ஒரு நிகழ்ச்சியின் போது பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ரவுஃப், கண்ணை மூடிக்கொண்டு ஒரு ஆளுமையை யூகிக்க பணிக்கப்பட்டார். அவரால் அதை கணிக்க முடியாத நிலையில், தொகுப்பாளர் அளித்த க்ளூவிற்கு பிறகு ஹரிஸ் ராஃப் அவர் யார் என்பதை கண்டுபிடித்தார்.

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பாகிஸ்தானில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போதைய வீரர்களில், விராட் கோலி பாகிஸ்தானில் மிகவும் பிரபலமான வீரர். இருப்பினும் கடந்த 2022 டி20 உலகக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தானை சந்தித்தபோது, பாகிஸ்தானுக்கு எதிராக கோலியின் பேட் நிறைய சேதத்தை ஏற்படுத்தியது. அப்படி இருந்த போதிலும், அதற்கு பிறகும் நட்சத்திர பேட்ஸ்மேனாக இருக்கும் விராட் கோலிக்கு, அங்கு மேலும் மரியாதை வானத்தின் அளவு உயர்ந்தது.

அதற்கு உதாரணமாக பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ரவுஃப் பங்கேற்ற நிகழ்ச்சியின் போது, இந்திய வீரர் கோலியைப் பற்றிய தொகுப்பாளரின் விளக்கம், பாகிஸ்தான் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் இந்திய வீரரை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதற்கு சரியான உதாரணமாக இருந்தது.

ஒரு பாகிஸ்தானிய தொலைக்காட்சி சேனலுக்கான நிகழ்ச்சியில், ஹரிஸ் ரவூஃப் ஒரு சுற்றில் பிரபலான நபரைக் கண்ணை மூடிக்கொண்டு, டிவி திரையில் இருப்பவரை யூகித்து சொல்லுமாறு கேட்கப்பட்டார். அப்போது ஹரிஸ் ராஃப் அவர் யார் என்பதை கண்டுபிடிப்பதற்கு உதவ, அறிவிப்பாளர் க்ளூ’க்கள் கொடுத்து அந்த நபரை திரையில் விவரிக்க முயன்றார். அந்த விவரிப்பில் தொகுப்பாளர் ஒருமுறை (ரக், ரக் கே தேதா ஹை) ”அவர் அதை கடுமையாக அடித்து நொறுக்குவார்" என்று கூறினார்.

அதற்கு ஹரிஸ் ராஃப், “அவர் ஒரு கிரிக்கெட்டரா?” என்று கேட்க, பதிலளித்த தொகுப்பாளர், ஆமாம் (ஆப்கோ பி ரக் ரக் கே தியே ஹைன்) ”அவர் உங்கள் பந்துவீச்சுக்கு எதிராகவும் கடுமையாக அடித்து நொறுக்கினார்” என்று கூறினார். அப்போது அதிகம் யோசிக்காமல் விரைவாக சிரித்துகொண்டே கண்டுபிடித்த ஹரிஸ் ராஃப், “விராட் கோலி” என்று சரியாக சொன்னார்.

அப்போது பேசிய ஹாரிஸ் ராஃப், கோலியைப் பாராட்டினார். 2022 டி20 உலகக் கோப்பை போட்டியின் போது ரன்-சேஸிங்கில் 19வது ஓவரில், கோலி தனக்கு எதிராக அடித்த இரட்டை சிக்ஸர்களைப் பற்றியும் அவர் பாரட்டி பேசினார். அதுகுறித்து அவர் கூறிய போது, "கிரிக்கெட் தெரிந்த எவருக்கும் அவர் எப்படிப்பட்ட வீரர் என்பது தெரியும். அவர் இப்போது அந்த ஷாட்டை விளையாடியுள்ளார், அவரால் அதை மீண்டும் செய்ய முடியும் என்று கூட நான் நினைக்கவில்லை. அதுபோன்ற ஷாட்கள் மிகவும் அரிதானவை, அவற்றை மீண்டும் மீண்டும் அடிக்க முடியாது. . அவரது டைமிங் அற்புதமாக இருந்தது, அது சிக்ஸருக்கு சென்றது நம்ப முடியாததாக இருந்தது" என்று கூறினார்.

பாகிஸ்தானுக்கு எதிராக அந்த குறிப்பிட்ட போட்டியைப் பொறுத்தவரை, 34 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணியை விராட் வெற்றிக்கு அழைத்து சென்றார். கோலி ஹாரிஸ் ரவூஃபுக்கு எதிராக இரண்டு அற்புதமான சிக்ஸர்களை அடித்தபோது, ஆட்டத்தை இந்தியாவிற்கு சாதகமாக மாற்றினார். கடைசி 8 பந்துகளில் இந்தியாவின் வெற்றிக்கு 28 ரன்கள் தேவைப்பட்ட போது, விராட் அதை செய்து காட்டினார். விராட் 53 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உட்பட 82 ரன்கள் எடுத்து அசத்தியிருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com