தனது குழந்தையை கையில் வைத்துள்ளபடி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் ஹர்த்திக் பாண்டியா.
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஹர்த்திக் பாண்டியாவும், இந்தி நடிகையும், மாடல் அழகியுமான நடாசா ஸ்டீன்கோவிச் ஆகிய இருவரும் காதலித்து வந்தனர். சமூக வலைத்தளங்களில் இருவரும் அடிக்கடி புகைப்படங்களை பகிர்ந்து வந்தனர். நேற்று முன் தினம் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
குஜராத்தில் உள்ள மருத்துவமனையில் நடாசா அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. தந்தையான சந்தோஷத்தில், தனது குழந்தையை கையில் வைத்துள்ளபடி இன்ஸ்டகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றைப் பாண்டியா பகிர்ந்துள்ளார். பல முன்னணி கிரிக்கெட் வீரர்களும், பிரபலங்களும் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.