\
அசத்தலாக தாவிக் குதித்து ஒரு கையில் கேட்ச் பிடித்த ஹர்மன்பிரீத் (வீடியோ)

அசத்தலாக தாவிக் குதித்து ஒரு கையில் கேட்ச் பிடித்த ஹர்மன்பிரீத் (வீடியோ)

அசத்தலாக தாவிக் குதித்து ஒரு கையில் கேட்ச் பிடித்த ஹர்மன்பிரீத் (வீடியோ)
Published on

வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இந்திய வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர் பிடித்த கேட்ச் மிகவும் வைரலாகி வருகிறது.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது. இந்தத் தொடரின் முதல் போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய மகளிர் அணி 50 ஓவர்களில் 224 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன்மூலம் இந்திய மகளிர் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் போட்டியில் தோல்வி அடைந்தது. 

இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்டிங்கின்போது 50 ஓவரை எக்தா பிஸ்ட் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தை வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஸ்டேஃபனி டெய்லர் சந்தித்தார். அவர் அப்போது இவர் 94 ரன்கள் அடித்திருந்தார். கடைசி பந்தில் சிக்சர் அடித்தால் டெய்லர் சதம் அடித்திருப்பார். இதனால் அவர் சிக்சர் அடிக்க முயற்சி செய்தார். பந்து எல்லை கோட்டை நோக்கி சென்றது. அந்தச் சமயத்தில் இந்திய வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர் அசத்தலாக தாவி குதித்து ஒரு கையில் பந்தை அற்புதமாக கேட்ச் பிடித்தார். 

இது தொடர்பான வீடியோவை ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com